கேரளா: பத்தினம்திட்டா அடுத்த பிரக்கணம் பகுதியைச் சார்ந்தவர் அக்கில் கே பாபி. இவர் 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் 25 ஆம் தேதி எலந்தூர் பகுதியில் உள்ள ஒரு கோயில் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனத்தின் மீது எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானார்.
விபத்தில் படுகாயம் அடைந்த அக்கில் அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக வேலூரில் உள்ள சி.எம்.சி (CMC) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பின் அக்கிலின் வாழ்க்கை முன்பை போல் இல்லாமல் மிகவும் மாற்றம் அடைந்து இருந்தது.
விபத்தில் அக்கில் முதுகெலும்பு உட்பட தனது உடம்பின் முக்கிய பாகங்கள் பாத்திப்பிற்கு உள்ளாகினார். அக்கிலின் இந்த கோரமான விபத்து ஆறாம் ஆண்டு நிறைவடைய சில தினங்களுக்கு முன் நீதிமன்றம் அக்கிலுக்கு அளித்த தீர்ப்பு அவர் இத்தனை ஆண்டுகளாக அனுபவித்த துன்பங்களில் இருந்த சற்று விடுவித்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி ஜே.பி.ஜெயகிருஷ்ணன், அக்கில்லுக்கு ஏற்பட்ட மொத்த இழப்பீடு 1,02,49,440 ரூபாயும், இதுவரை செலவான சட்ட செலவு 6லட்சத்து 17ஆயிரத்து 333 ரூபாயும். குறிப்பாக சட்ட செலவான பணத்திற்க்கு 9 விழுக்காடு வட்டியுடன் மொத்தம் 1.58 கோடி ரூபாய் இழப்பீடு தொகையாக வழங்க உத்தரவிட்டார். பத்தனம்திட்டாவில் உள்ள நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனம் இந்த தொகையை செலுத்துமாறு உத்தரவிட்டது.
மேலும் இந்த வழக்கு 2018 மார்ச் மாதம் 15 ஆம் தேதி பதியப்பட்டது என்பதும், அந்த நாளில் இருந்து 9 விழுக்காடு வட்டியை கணக்கிட்டடு மொத்தமாக நீதிமன்றம் இழப்பீடு வழங்கியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: யாசின் மாலிக் நேரில் ஆஜரான விவகாரம்: 4 சிறைத்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம்