கேரள மாநிலத்தில் பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்தவர் அப்துல் ஜலீல் (24). இவர், தேசிய கீதத்தை கீழிருந்து மேலாக எழுதி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
இவர் கன்னுர் பல்கலைகழக்கத்தில் விளையாட்டாக அரபு மொழியை இடமிருந்து வலமாக எழுத முயற்சி செய்துள்ளார். பொதுவாக அரபு மொழி வலமிருந்து இடமாகவே எழுதுதப்படும். ஆனால் அப்துல் அதனை இடமிருந்து வலமாக எழுதியுள்ளார். இவரது திறமையை பார்த்த நண்பர்கள், அவரை ஊக்கப்படுத்தினர். பொதுமுடக்கச் சமயத்தில், அரபு மொழியை தலைகீழாக எழுதுவதில் கின்னஸ் சாதனை ஏற்படுத்தலாம் என்ற தகவல் அப்துலுக்கு தெரிய வந்துள்ளது.
இதைத் தொடர்ந்து, அவர் தினமும் இரவு நேரத்தில் இரண்டு மணி நேரம் பயிற்சி எடுத்துள்ளார். முதலில், தியாகிகளின் பெயர்களை தலைகீழாக எழுத முயற்சி செய்துள்ளார். அவற்றை நியாபகம் வைத்துக் கொள்வது கடினமாக இருந்ததால், அனைவருக்கும் நன்கு தெரிந்த தேசிய கீதத்தைக் கையில் எடுத்துள்ளார். பயிற்சியின் காரணமாக, முதல் முயற்சியிலே அரபு மொழியில் தேசிய கீதத்தை இடமிருந்து வலமாகவும், தலைகீழாகவும் 2 நிமிடங்கள் 47 நொடிகளில் எழுதி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். இவருக்குப் பாராட்டுக்குள் குவிந்து வருகிறது. எதிர்காலத்தில் ஆசிரியர் ஆக வேண்டும் என்பதே அப்துலின் கனவாக உள்ளது.
இதையும் படிங்க: நாளொன்றுக்கு 10 ஆயிரத்தைக் கடக்கும் தினசரி கரோனா பாதிப்பு