திருவனந்தபுரம்: கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள துவல்திரம் கடற்கரையில் நேற்று(மே 7) இரவு சுமார் 7 மணியளவில் 40 சுற்றுலா பயணிகளுடன் சென்ற ஈரடுக்கு சொகுசு படகு ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. தனூர் பகுதியில் சென்ற போது விபத்தில் சிக்கிய படகு கடலில் மூழ்கியது. இதில் படகில் பயணம் செய்தவர்கள் அனைவரும் கடலில் விழுந்து தத்தளித்தனர்.
விபத்து குறித்து அறிந்த மீட்புக் குழுவினர் நிகழ்விடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் தேசிய பேரிடம் மீட்பு படை(NDRF) குழுவினர், ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் உள்ளிட்டோர் இணைந்து மீட்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். போதிய வெளிச்சமின்மை காரணமாக இரவு நேரத்தில் மீட்பு பணிகளில் சற்று சுணக்கம் ஏற்பட்டது.
ஆனாலும், மின் விளக்குகள் ஏற்பாடு செய்யப்பட்டு இரவிலும் தொடர்ந்து மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்றது. நேற்று இரவு 9 பேர் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், காணாமல் போனவர்களை தேடும் பணியில் ஈடுபட்ட மீட்பு குழுவினர் மேலும் 13 பேர் உடல்களை மீட்டுள்ளனர். இதனால் படகு விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 22-ஆக உயர்ந்துள்ளது. உயிருடன் மீட்கப்பட்ட 10 பேருக்கு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: உ.பி.யில் திருமண கோஷ்டி சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து - 5 பேர் பலி!
சம்பவ இடத்தில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக கேரள மாநில அரசு அறிவித்துள்ளது. மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் அவசர கூட்டத்தை கூட்டி மீட்பு பணிகள் மற்றும் சிகிச்சையை தீவிரப்படுத்தியுள்ளார். படகு விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, உள்துறை அமைச்சர் அமித்ஷா, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
The tragic loss of lives in the boat mishap at Malappuram, Kerala is extremely shocking and saddening. My heartfelt condolences to the families who lost their loved ones. I pray for well-being of the survivors.
— President of India (@rashtrapatibhvn) May 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The tragic loss of lives in the boat mishap at Malappuram, Kerala is extremely shocking and saddening. My heartfelt condolences to the families who lost their loved ones. I pray for well-being of the survivors.
— President of India (@rashtrapatibhvn) May 7, 2023The tragic loss of lives in the boat mishap at Malappuram, Kerala is extremely shocking and saddening. My heartfelt condolences to the families who lost their loved ones. I pray for well-being of the survivors.
— President of India (@rashtrapatibhvn) May 7, 2023
பிரதமர் நரேந்திர மோடி விடுத்துள்ள இரங்கல் செய்தியில்,"படகு விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல், விபத்தில் பலியானோர் குடும்பத்திற்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் பிரதமர் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும்" என்று கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, படகு விபத்து காரணமாக கேரள மாநிலத்தில் இன்று நடைபெறவிருந்த அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. விபத்து நடந்த இடத்தில் அம்மாநில முதலமைச்சர் பினராயில் விஜயன் நேரில் ஆய்வு செய்ய உள்ளார்.
-
Deeply saddened by the tragic loss of lives in the Tanur boat accident in Malappuram. Have directed the District administration to effectively coordinate rescue operations, which are being overseen by Cabinet Ministers. Heartfelt condolences to the grieving families & friends.
— Pinarayi Vijayan (@pinarayivijayan) May 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Deeply saddened by the tragic loss of lives in the Tanur boat accident in Malappuram. Have directed the District administration to effectively coordinate rescue operations, which are being overseen by Cabinet Ministers. Heartfelt condolences to the grieving families & friends.
— Pinarayi Vijayan (@pinarayivijayan) May 7, 2023Deeply saddened by the tragic loss of lives in the Tanur boat accident in Malappuram. Have directed the District administration to effectively coordinate rescue operations, which are being overseen by Cabinet Ministers. Heartfelt condolences to the grieving families & friends.
— Pinarayi Vijayan (@pinarayivijayan) May 7, 2023
கேரளாவில் சுற்றுலா படகுகளுக்கு மாலை 5 மணிவரை மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த படகானது இரவு 7 மணி வரை சுற்றுலா பயணிகளுடன் கடலில் இருந்ததற்கான காரணம் குறித்து தெரியவில்லை. விபத்து தொடர்பாக அம்மாநில போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க:விளையாட்டு இயந்திரத்தில் சிக்கி சிறுமியின் கை விரல்கள் துண்டிப்பு - போலீஸ் விசாரணை!