கேரளா: கேரளா மாநிலத்தில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் உலகப் புகழ் பெற்றது. இங்குள்ள தலைமை பூசாரி மேல்சாந்தி என்றழைக்கப்படுவார். மேல்சாந்தியின் பதவிக்காலம் ஒரு ஆண்டு ஆகும். தற்போது உள்ள மேல்சாந்தியின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில், அடுத்த மேல்சாந்திக்கான தேர்வு சமீபத்தில் நடந்தது.
குலுக்கல் முறையில் நடத்தப்பட்ட இந்த தேர்வில் நான்கு சீட்டுகளில் இரண்டு மடிக்கப்பட்டதாகவும், இரண்டு சுருட்டி வைக்கப்பட்டதாகவும் இருந்துள்ளது. இதனால் மேல்சாந்தி தேர்வினை ரத்து செய்யும்படி திருவனந்தபுரத்தைச் சேர்ந்த மதுசூதன் நம்பூதிரி மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனுவை இன்று விசாரித்த கேரள உயர் நீதிமன்றத்தின் தேவசம் போர்டு அமர்வு, மேல்சாந்தி தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையில் தலையிட எந்தக் காரணமும் இல்லை எனத் தெரிவித்து தள்ளுபடி செய்தது. மேல்சாந்தி தேர்விற்கான குலுக்கலில் சீட்டுகள் மடிக்கப்பட்டுதான் இருந்தது என்ற அமிகஸ் கியூரியின் அறிக்கைபடி நீதிமன்றம் இந்த முடிவை எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: "விவாகரத்து என்னை மிகவும் பாதித்தது".. நீண்ட நாட்களுக்குப் பின் மனம் திறந்த சமந்தா!