மத்திய அரசால் அண்மையில் கொண்டுவரப்பட்ட வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் கடும் எதிர்ப்பலை வீசிவருகிறது. இந்தச் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானது என்று கூறி, டெல்லியில் ஆறாவது நாளாக இன்றும் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளின் தொடர் போராட்டத்தை மத்திய அரசு அலட்சியப்படுத்திவருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில், நாட்டின் உயிர்நாடியான விவசாயிகளுடன் நாம் துணைநிற்க வேண்டும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ட்வீட் செய்துள்ளார்.
அவரது பதிவில், "விவசாயிகளுடன் நாம் துணைநிற்க வேண்டிய நேரம் இது. விவசாயிகளின் பிரச்னைக்கு செவிசாய்த்து அதனைத் தீர்க்க முயற்சி செய்ய வேண்டும் என மத்திய அரசை கேட்டுக்கொள்கிறோம். இப்பிரச்னைக்காக நாடு முழுவதும் ஒன்றிணைய வேண்டும். ஏனென்றால், விவசாயிகள் தான் நம் நாட்டின் உயிர்நாடி ஆவர் எனக் குறிப்பிட்டுள்ளார்.
-
It is time to stand with our farmers. We urge the Government of India to listen to the protesting farmers and resolve the issue in an amicable manner. The whole of our country needs to come together on this; because farmers are the lifeblood of this country.
— Pinarayi Vijayan (@vijayanpinarayi) December 1, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">It is time to stand with our farmers. We urge the Government of India to listen to the protesting farmers and resolve the issue in an amicable manner. The whole of our country needs to come together on this; because farmers are the lifeblood of this country.
— Pinarayi Vijayan (@vijayanpinarayi) December 1, 2020It is time to stand with our farmers. We urge the Government of India to listen to the protesting farmers and resolve the issue in an amicable manner. The whole of our country needs to come together on this; because farmers are the lifeblood of this country.
— Pinarayi Vijayan (@vijayanpinarayi) December 1, 2020