ETV Bharat / bharat

கேரள விபத்து: தலைமறைவான படகு ஓட்டுநரை கைது செய்த போலீசார்! - படகு ஓட்டுநரை கைது செய்த போலீசார்

கேரள மாநிலம், மலப்புரம் அருகே படகு கவிழ்ந்து 22 பேர் பலியான சம்பவத்தில், தலைமறைவாகி இருந்த படகு ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.

Boat driver arrest
படகு ஓட்டுநர் கைது
author img

By

Published : May 10, 2023, 7:43 PM IST

மலப்புரம்: கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், தானூர் என்னும் ஊர் அப்பகுதியில் சுற்றுலாத்தலம் ஆகும். அங்குள்ள தூவல் தீரம் கடற்கரையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏராளமான சுற்றுலாப்பயணிகள் குவிந்தனர். இந்நிலையில் ஆறும், கடலும் ஒன்று சேரும் முகத்துவாரம் பகுதி அருகே சென்று கொண்டிருந்த சுற்றுலாப் படகு திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் தண்ணீரில் மூழ்கி, 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். காயம் அடைந்த 10 பேரை மீட்ட மீட்புப் படை வீரர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். இச்சம்பவம் கேரள மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில், படகு உரிமையாளர்கள் மற்றும் அதன் ஊழியர்கள் கவனக்குறைவாக செயல்பட்டதே விபத்துக்குக் காரணம் என்பது தெரியவந்துள்ளது. மேலும் மீன்பிடி படகை, விதிமுறை மீறி சுற்றுலாப் படகாக மாற்றியதும் அம்பலமானது.

விபத்தின்போது படகில் அதன் ஊழியர்கள் எத்தனை பேர் இருந்தனர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக படகு உரிமையாளர்கள் நாசர் மீது கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார், கோழிக்கோட்டில் பதுங்கியிருந்த அவரைக் கைது செய்தனர். மேலும் அவர் தலைமறைவாக இருக்க உதவிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.

இதற்கிடையே படகின் ஓட்டுநர் தினேஷன் மாயமானார். அவரை போலீசார் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், தானூரில் கைது செய்யப்பட்டார். ஏற்கனவே இச்சம்பவம் தொடர்பாக கேரள மாநில அரசு நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: வாக்குப்பதிவு இயந்திரங்கள் கடத்தல் என வதந்தி... விவிபாட், வாக்கு இயந்திரங்களை வீதியில் வீசி மக்கள் கலவரம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.