ETV Bharat / bharat

பாஜக எதிர்ப்பு: எதிர்கட்சிகளின் ஒன்றிணைவு பலன் அளித்ததா? - Federal Front Fighters

பாஜகவிற்கு எதிராக தேசிய அளவிலும், மாநில அளவிலும் எதிர்கட்சிகளின் ஒன்றிணைவு பெரியதாக பலனிக்கவில்லை என ஈடிவி பாரத் ஜார்க்கண்ட் மாநில செய்தி ஆசிரியர் பூபேந்திர தூபே தெரிவித்துளளார்.

Federal Front
Federal Front
author img

By

Published : Mar 10, 2022, 8:21 AM IST

ஐந்து மாநில தேர்தல் வாக்குப்பதிவு மார்ச் 7ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், அரசியல் அதிகாரம் யார் யார் கைகளுக்கு மாறுகிறது, யாரிடம் நிலைக்க போகிறது என்பதற்கான பதில்கள் நாளை (மார்ச் 10) இந்நேரம் தெரிந்துவிடும்.

அதேநேரத்தில், பிராந்திய ரீதியில் அதிகாரங்களை தக்கவைக்கவும், கருத்தியல் ரீதியாக வலுபெறவும் எண்ணிக்கொண்டிருந்த கட்சிகளின் திட்டங்கள் அனைத்தும் தலைகீழாக மாறியுள்ளது.

கூட்டாட்சி முன்னணி போராளிகள்

உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய ஐந்து மாநிலங்களிலும், பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக ஒரு வலிமையான சக்தியாக உருவாக பல பிராந்திய கட்சிகள் இந்த தேர்தல்களில் களமிறங்கின. ஆனால், அது சரியாக ஒருங்கிணைக்கப்படாததால், களத்தில் எடுபடவில்லை.

எதிர்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயல்பட நினைத்தனர். தங்களை ஒரு கூட்டாச்சி முன்னணி போராளிகளாகவும் காட்டிக்கொள்ளும் கட்சிகள் அனைத்தும் ஒரே திசையில்தான் சென்றனர். அவர்கள் தங்களின் ஒற்றுமையின் மூலம் பிரதமர் மோடியின் தலைமையிலான அரசுக்கு சவால்விட நினைத்தனர்.

ஆனால், எதிர்கட்சிகளின் முகாம்களில் ஒத்திசைவு என்பது காணாமல் போனது. பாஜகவை எந்தவிதத்தில் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதை எதிர்கட்சிகள் தவறவிட்டுவிட்டனர். இது தவிர, சில பிராந்தியக் கட்சிகள் கூட்டாட்சி முன்னணிக்கு பலம் கொடுக்க தங்கள் 'கூட்டு' விட்டு கடைசிவரை வெளியே வரவேயில்லை.

பீகாரும், உ.பி.,யும்

டெல்லியின் அதிகார பீடம் பீகார் மற்றும் உத்தரப்பிரதேச்சத்தின் வாயிலாகதான் தக்கவைக்க முடியும் என்பதை இந்திய அரசியல் வரலாறு வழிநெடுக பல உதாரணங்களை நமக்கு காட்டுகிறது. அதுதான் தற்போதும் உறுதியாகியுள்ளது.

பீகார், உ.பி.,யில் மோடி தனது செல்வாக்கினை கொண்டும், கவர்ச்சியைக் கொண்டும் ஆளுமை செலுத்திவருவதால் தான், அவர் டெல்லி அரியணையில் சௌரியமாக அமர முடிகிறது. உ.பி., தேர்தலில் பாஜகவின் கூட்டணி சகாக்கள் அவர்களுக்கு கை கொடுக்க முன்வந்தாலும், அது பெரிய அளவில் கை கொடுக்கவில்லை.

உ.பி.யில்., பாஜகவின் தோழமைகள்

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் முக்கிய பங்கினை வகிக்கிறது. ஐக்கிய ஜனதா தளம் உ.பி., தேர்தலில் பங்கெடுத்தது. ஆனால் ஏழு தீர்வு திட்டங்கள், வீடுதோறும் தண்ணீர் பைப்கள் அமைப்பு, மதுவிலக்கு, மாணவிகளுக்கு சைக்கிள் மற்றும் சீரூடை ஆகியவை இந்த தேர்தலில் போதிய கவனம் பெறவில்லை. அதேபோல, பீகாரின் முன்னாள் முதலமைச்சர் ஜிதன் ராம் மஞ்சியும், களமிறக்க ஆசைப்பட்டார். என்ன தயக்கமோ, கடைசிவரை களமிறங்கவில்லை. பாஜகவின் மற்றொரு பீகார் கூட்டாளியான முகேஷ் சாஹானி உ.பி., களமிறங்கியிருந்தாலும் பெரிய அளவில் பயனில்லை.

மறுபுறம், பீகாரின் எதிர்கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) உ.பி.,யை கண்டுகொள்ளவே இல்லை. அதன் தலைவர் தேஜஸ்வி பிரசாத் யாதவ், கடந்தாண்டு முலாயம் சிங் வீட்டு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்தபோதே உ.பி., தேர்தலில் போட்டியிட மாட்டோம் என்பதை உறுதிப்படுத்திவிட்டார். இருப்பினும், சமாஜ்வாதிக்கு ஆதரவாக சில இடங்களில் ஆர்ஜேடி களமிறங்கியது. ஆனால், தேஜஸ்வி பரப்புரைக்கு வரவேயில்லை.

மம்தாவின் முயற்சி

2021 மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலின்போது, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா ஹிமந்த் சோரன், ஆர்ஜேடியின் ஜேதஸ்வி பிரசாத் யாதவ், ஆம் ஆத்மியின் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் மம்தாவிற்கு ஆதரவு அளித்தனர். மேலும், அவர்கள் மேற்கு வங்கத்தில் பிரச்சாரமும் செய்ய முன்வந்தனர். ஆனால், அவர்களின் ஆதரவை வரவேற்ற மம்தா, அவர்களை பிரச்சாரத்திற்கு வரவேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது, உ.பி., தேர்தல் பிரச்சாரத்தின்போது அகிலேஷூக்கு ஆதரவாக மம்தா இரண்டு முறை விசிட் அடித்தார். இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், மம்தா போன்று மோடிக்கு சவால் விடுபவர்களை எதிர்கட்சிகள் அங்கு அழைத்துவர விரும்புகின்றன.

சமாஜ்வாதி லிஸ்டில் ஹேமந்த் சோரானும் இருந்தார் என கூறப்பட்டது. ஆனால், அவர் பிரச்சாரத்திற்கு வரவில்லை. ஏனென்றால், உ.பி.,யில் சமாஜ்வாதிக்கு ஆதரவாக பிரச்சாரத்திற்கு வந்தால், ஜார்க்கண்டில் காங்கிரஸ் உடனான கூட்டணிக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Federal Front
Federal Front

ஆம் ஆத்மி, சிவ சேனாவின் நிலை

ஆரம்பத்தில், உ.பி., முக்கிய பிரச்சனைகளான உன்னாவ் கூட்டுப்பாலியல் வழக்கு, சோன்பத்ரா விவசாயிகள் பிரச்சனை ஆகியவற்றில் முன்னணியில் இருந்தனர். ஆம் ஆத்மி தலைவர் சஞ்சய் சிங், மக்கள் பிரச்சனைக்காக நாடாளுமன்றத்தில் மட்டுமில்லமால் களத்தில் குரல் கொடுத்து வந்தார். ஆனாலும், உ.பி.,யில் ஆம் ஆத்மிக்கு பெரிதாக மவுஸ் இல்லை. அக்கட்சியின் அதிர்வலை என்பது பஞ்சாப் மாநிலத்தோடு நின்றுவிட்டது. 2014 மக்களவை தேர்தலிலும் கூட, வாரணாசியில் மோடிக்கு எதிராக கெஜ்ரிவால் பிரச்சாரம் செய்தார் என்பது நினைவுக்கூரத்தக்கது.

மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, உ.பி.யில்., சிவ் சேனா போட்டியிடும் ஒற்றை இடத்திற்கு மட்டும் வந்து பிரச்சாரம் செய்துவிட்டு சென்றார். பஞ்சாப், பீகார், கோவாவில் இருக்கும் செல்வாக்கு அக்கட்சிக்கு உ.பி.யில் இல்லை.

ஓவைசி, தனது கட்சியினை நிலை நிறுத்த மேற்கு உத்தரப் பிரதேசத்தில் கடினமாக உழைத்துள்ளார். இருந்தாலும், அக்கட்சி பெரிய வெற்றியைப் பெற வாய்ப்பில்லை. சிறுபான்மையின முகம், அவருக்கு வெற்றியைத் தேடித்தராது என்பது இதன்மூலம் உறுதியாகியுள்ளது.

ஓசிபியின் வாக்கு வங்கியும் பாஜகவும்

பாஜக வட இந்திய மட்டுமின்றி தென்னிந்தியாவிலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் வாக்கு வங்கியில் பெரிய செல்வாக்கினை செலுத்தி வருகிறது. இது தேர்தல் வெற்றி குறித்தான கதையாடலையே மாற்றியுள்ளது என்றுதான் கூற வேண்டும். முன்பெல்லாம், கட்சிகள் ஜாதி ரீதியாக வாக்குகளை பெற்றுவந்த நிலையில், தற்போது அந்த நிலை மாறியுள்ளது. இப்போது, தேர்தல் களம் வளர்ச்சிப் பிரச்சனைகள் என்றாகிவிட்டது.

தேர்தல் நேரத்திற்கு மட்டுமா?

கூட்டாட்சி முன்னணியை அமைக்க முயற்சி எடுத்து வந்த தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், இப்போது அப்படி எந்த முன்னணியும் அமைக்கவில்லை என்று மறுத்துள்ளார்.பாஜகவின் வளர்ச்சியை தடுக்க, தேசிய அளவில் ஒரு பெரும் விவாதம் நடைபெற்று வருவதாக எதிர்கட்சிகள் தெரிவிக்கின்றன.

ஆனால், இந்த கூட்டாட்சி முன்னணி வெற்றியடையாமல் போனதால், தற்போது பாஜகவுக்கு இது நிம்மதியை அளித்துள்ளது. 2023ல் ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களுக்கு தேர்தல் வரும்போது எதிர்கட்சிகளின் ஒற்றுமை பற்றிய பேச்சு மீண்டும் புத்துயிர் பெறும் என்பதை நம்பலாம்.

இதையும் படிங்க: UP Exit Polls: 'மாற்றம்' என்ற முழக்கம் வீழ்ந்தது ஏன்?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.