டெல்லி: காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு விசாரணைக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்தார். சீன நாட்டினருக்கு முறைகேடாக விசா வழங்கிய குற்ற்ச்சாட்டிற்கு பதிலளித்த அவர், ‘ தமக்கும் அந்த விவகாரத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்தார்.
சென்ற மே 17 அன்று கார்த்தி சிதம்பரத்தின் நெருங்கிய நண்பர் எஸ் பாஸ்கர் ராமனை சிபிஐ கைது செய்தது. பின்னர் நீதிமன்றம் உத்தரவுப்படி இந்தியா திரும்பியதும் அடுத்த 16 மணி நேரத்தில் சிபிஐ முன் ஆஜாராகுமாறு கார்த்தி சிதம்பரத்திற்கு சம்மன் அனுப்பப்பட்டது. அவர் ஆஜாராகத பட்சத்தில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
அமலாக்கத் துறையின் வழக்கில் கார்த்தி சிதம்பரம் சீன நாட்டவருக்கு முறைகேடாக விசா வழங்கியதாகவும், பஞசாப்பில் மின் கட்டுமான பணிகளை முடிப்பதற்காக 263 சீன நாட்டவர்களை இந்திய அழைத்து வர ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. மேலும் இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் தந்தையும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ப சிதம்பரத்தின் பெயர் இடம்பெறவில்லை.
கார்த்தி சிதம்பரம் தவிர, அவரின் கணக்காளர் எஸ்.பாஸ்கரராமன், மான்சாவைச் சேர்ந்த தனியார் நிறுவனமான தல்வாண்டி சபோ பவர் லிமிடெட் மற்றும் மும்பையின் பெல் டூல்ஸ் நிறுவனத்தின் பிரதிநிதி விகாஸ் மகாரியா, அரசு ஊழியர்கள் உட்பட மொத்தம் நான்கு பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
இதையும் படிங்க:இந்தியா வந்த 16 மணி நேரத்தில் சிபிஐ முன் ஆஜராக வேண்டும்!- கார்த்தி சிதம்பரத்திற்கு கெடு வைத்த அமலாக்கத்துறை