ETV Bharat / bharat

போக்சோ வழக்கு... தவறான நபரை கைது செய்த அலுவலர்களுக்கு ரூ.5 லட்சம் ஃபைன்

மங்களூருவில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், தவறான நபரை கைது செய்து சிறையிலடைத்த பெண் காவல் அலுவலர்களுக்கு 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

Karnataka
Karnataka
author img

By

Published : Dec 2, 2022, 7:49 PM IST

மங்களூரு: கர்நாடக மாநிலம், மங்களூருவில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக நவீன் என்பவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. சிறுமி அளித்த வாக்குமூலத்தின்படி, நவீன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த மங்களூரு போலீசார், கவனக்குறைவாக நவீனுக்கு பதிலாக நவீன் செக்வேரா(47)-வை கைது செய்துள்ளனர்.

இந்த வழக்கை விசாரித்த காவல் ஆய்வாளர் ரேவதி, நவீன் செக்வேரா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார். இதையடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி நவீன் செக்வேரா சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் தக்‌ஷின கன்னடா மாவட்டத்தின் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நவீன் செக்வேரா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், "நவீன் செக்வேரா நிரபராதி, போலீசார் அவரை தவறுதலாக கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரின் பெயர் 'நவீன்'.

நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து ஆவணங்களிலும் நவீன் என்ற பெயர் மட்டுமே உள்ளது, அதிலும் வயது 25 முதல் 26 வரை இருக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், தண்டனை பெற்று, நீதிமன்றக் காவலில் உள்ள குற்றவாளியின் பெயர் நவீன் செக்வேரா, வயது 47. போலீசார் உண்மையான குற்றவாளியை விட்டுவிட்டு, தவறான நபரை கைது செய்துள்ளனர். நிரபராதியான அவர் சுமார் 1 வருடம் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்" என்று வாதிட்டனர்.

இதைப் பதிவு செய்த நீதிமன்றம், நவீன் செக்வேரா நிரபராதி என தீர்ப்பளித்து, அவரை விடுதலை செய்தது. தவறான நபரை கைது செய்து சிறையில் அடைக்க காரணமான பெண் காவல் அலுவலர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க கர்நாடக உள்துறை செயலாளருக்கு உத்தரவிட்டது. மேலும், இரு பெண் அலுவலர்களும் தங்களது சொந்தப் பணத்திலிருந்து 5 லட்சம் ரூபாயை நவீன் செக்வேராவுக்கு இழப்பீடாக வழங்கவும் உத்தரவிடப்பட்டது.

இதையும் படிங்க:உத்தரகாண்ட்டில் தங்கைக்கு பவுன்ஸ் செக்... அண்ணனுக்கு 4 மாதங்கள் சிறைத்தண்டனை...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.