உத்தரப் பிரதேசம், ஹரியானா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களை தொடர்ந்து கர்நாடகாவிலும் திருமணத்திற்காக மதம் மாறுவதைத் தடுக்கச் சட்டம் இயற்றப்படவுள்ளது. இது குறித்து பாஜக தேசிய செயலாளரும் கர்நாடக சுற்றுலாத் துறை அமைச்சருமான சி.டி. ரவி கூறுகையில், "பெண்களை அவமதிக்கும் வகையில் ஜிகாதிகள் செயல்பட்டால், அதனைப் பார்த்துக் கொண்டு அரசு அமைதியாக இருக்காது.
அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் கருத்துக்கு ஏற்ப திருமணத்திற்காக மதம் மாறுவதைத் தடுக்கச் சட்டம் இயற்றப்படும். இதில், ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்கப்படும்" என்றார். கடந்த 31ஆம் தேதி, திருமணத்திற்காக மதம் மாறுவது சட்டவிரோதமானது, செல்லாது என அலகாபாத் உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.