ETV Bharat / bharat

கர்நாடக சபாநாயகர் மீது பேப்பர் வீசி பாஜக எம்.எல்.ஏக்கள் அமளி! 10 பாஜக எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட்! - கர்நாடக சட்ட பேரவை கூட்டம் பாஜக எம்எல்ஏ சஸ்பெண்ட்

கர்நாடக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் சபாநாயகர் இருக்கை மீது காகிதத்தை தூக்கி எறிந்து கடும் அமளியில் ஈடுபட்ட 10 பாஜக எம்.எல்.ஏக்கள் நடப்பு கூட்டத் தொடரில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

Karnataka Speaker
Karnataka Speaker
author img

By

Published : Jul 19, 2023, 6:00 PM IST

Updated : Jul 19, 2023, 9:55 PM IST

karnataka Speaker suspends 10 BJP MLAs till end of session

பெங்களூரு : கர்நாடகா சட்டப்பேரவைக் கூட்டத்தில் மசோதா தாக்கலின் காகிதத்தை கிழித்தும், சபாநாயகர் இருக்கை மீது தூக்கி வீசியும் அமளியில் ஈடுபட்ட 10 பாஜக எம்.எல்.ஏக்களை நடப்பு சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் இருந்து இடை நீக்கம் செய்து சபாநாயகர் யு.டி. காதர் உத்தரவிட்டு உள்ளார்.

கடந்த ஜூலை 3ஆம் தேதி கர்நாடக சட்டப் பேரவை கூட்டத் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக அனைத்து எதிர்க்கட்சிகள் கூட்டம் பெங்களூருவில் நடைபெற்ற நிலையில், கூட்டத்திற்காக ஐஏஎஸ் அதிகாரிகளை மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் கட்சி தவறாக பயன்படுத்தியதாக கூறி சட்டப் பேரவைக் கூட்டத்தில் பாஜக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

அவையின் முன்னாள் திரண்டு கோஷம் எழுப்பிய பாஜக உறுப்பினர்கள், அங்கிருந்த மசோதா உள்ளிட்ட ஆவணங்களின் காகிதங்களை கிழத்து, சபாநாயகர் இருக்கை மீது தூக்கி வீசியதாகவும் கூறப்படுகிறது. உணவு இடைவேளைக்கு பின்னரும் பாஜக எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு உள்ளனர்.

சட்டப்பேரவையில் பேசிய முன்னாள் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, காங்கிரஸ் கட்சி அடக்குமுறை வெறுப்பு அரசியலில் ஈடுபடுவதாகவும், சபாநாயகர் பதவி தவறாக பயன்படுத்தப்படுவதாகவும் கூறினார். மேலும் சபாநாயகர் கை பொம்மை போன்று உள்ளதாகவும் ஆளுங்கட்சியின் கைப்பாவையாக செயல்படுவதாகவும் தெரிவித்தார்.

சபாநாயகர் பதவியின் கண்ணியத்தை பறிக்கப்படுவதாகவும் அரசியல் ஆதாயத்திற்காக அதை தவறாக பயன்படுத்தப்படுவதாகவும் கூறினார். தொடர்ந்து பாஜக அமளியில் ஈடுபட்டதை அடுத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் கொறடா அசோக் பட்டன் கோரிக்கை விடுத்தார்.

அமளியில் ஈடுபட்ட பாஜக எம்.எல்.ஏக்கள் 10 பேர் இடைநீக்கம் செய்யப்பட வேண்டும் என சட்டத் துறை அமைச்சர் எச்.கே. பாடீல் சட்டப் பேரவையில் இடைக்க நீக்க தீர்மானத்தை கொண்டு வந்தார். இடைநீக்க தீர்மானத்தை ஏற்றுக் கொண்ட சபாநாயகர், 3 முன்னாள் அமைச்சர்கள் உள்பட 10 பாஜக எம்.எல்.ஏக்களை நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தில் இருந்து இடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

அஷ்வத் நாராயண், சுனில் குமார், யஷ்பால் சுவர்ணா, ஆர்.அசோக், உமாநாத் கோட்யான், அரவிந்த பெல்லாட், பரத் ஷெட்டி, வேதவியாஸ் காமத், தீரஜ் முனிராஜு, அரகா ஞானேந்திரா ஆகிய பாஜக எம்.எல்.ஏக்கள் நடப்பு சட்டப் பேரவை கூட்டத் தொடரில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க : காதல் விவகாரத்தில் மோதல்.. பழங்குடியின இளைஞர் மீது தாக்கி சிறுநீர் கழித்த கொடூரம்! 6 பேர் கைது!

Last Updated : Jul 19, 2023, 9:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.