பெலகாவி: கர்நாடகா மாநிலம், பெலகாவி மாவட்டம், துக்கானட்டி பகுதியைச் சேர்ந்தவர், சிவப்பா யல்லப்பா மார்டி. கிராம பஞ்சாயத்து உறுப்பினராக உள்ளார். இவர் தனது செல்ல நாய் கிரிஷ் (Krish) உடைய பிறந்தநாளை 100 கிலோ கேக் வெட்டி கொண்டாடினார். மேலும் கிராமத்தில் உள்ள 5,000 பேருக்கு அசைவ உணவளித்து மகிழ்ந்தார்.
இதற்காக 3 குவிண்டால் கோழிக்கறி உணவு, 1 குவிண்டால் முட்டை, சைவ உணவு உண்பவர்களுக்கு 50 கிலோ சைவ உணவும் ஏற்பாடு செய்யப்பட்டது. கேக் வெட்டியபின், நாய் கிரிஷை ஊர்வலமாக கொண்டு சென்றனர். இந்த ஊர்வலத்தில் கிராம மக்கள் பலர் கலந்து கொண்டு மகிழ்ந்தனர்.
பிறந்தநாள் கொண்டாட்டத்தின் பின்னணி: சிவப்பா யல்லப்பா மார்டி, கடந்த 20 ஆண்டுகளாக கிராம பஞ்சாயத்து உறுப்பினராக உள்ளார். ஒருமுறை புதிய உறுப்பினர் ஒருவர், தனது பிறந்தநாளின்போது பழைய உறுப்பினர்களைப் பற்றி அவதூறான கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
அந்த புதிய உறுப்பினர், பழைய உறுப்பினர்களை, ’தங்கள் பதவிக்காலத்தில் சிலவற்றை நாய் போல் தின்று தீர்த்ததாகக் கூறி’ அவமானப்படுத்தியுள்ளார். இதனால் அந்த உறுப்பினரின் கருத்துக்குப் பதிலளிக்கும் வகையில், சிவப்பா தனது நாயின் பிறந்தநாளை பிரமாண்டமாக கொண்டாடியுள்ளார்.
இதையும் படிங்க: Video:நாய்க்கு பளிங்கு சிலை - முதியவரின் பாசம்!