தார்வாட்: கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டத்தைச் சேர்ந்த மஞ்சுநாத் முடோஜி என்ற இளைஞர், நேற்றிரவு(பிப்.23) தனது நண்பர்களுடன் காரில் ஹூப்ளி சென்று கொண்டிருந்தார். மஞ்சுநாத் முடோஜி அக்னிவீர் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர இருந்ததாகவும், அதற்காகவே அவரது நண்பர்கள் அவரை ஹூப்ளியில் விட்டுச் செல்ல காரில் சென்றதாகவும் தெரிகிறது.
கார் தார்வாட் அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக முன்னால் சென்ற லாரி மீது மோதியது. இந்த விபத்தில் பாதசாரி ஒருவர் உள்பட ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். நான்கு பேர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த விபத்தில் மஹாந்தேஷ் முடோஜி, பசவராஜ் நரகுண்டா, நாகப்பா முடோஜி, ஸ்ரீகுமார் மற்றும் பாதசாரி ஏரண்ணா ரமணகவுடர் உயிரிழந்ததாகவும், ஸ்ரவணகுமார் நரகுண்டா, மடிவாளப்பா அல்னவாரா, பிரகாஷ் கவுடா, மஞ்சுநாத் முடோஜி ஆகியோர் படுகாயமடைந்ததாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லோகேஷ் ஜகலாசர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: வெறிநாய்கள் கடித்ததில் 2 வயது குழந்தை உயிரிழப்பு