ETV Bharat / bharat

Karnataka Election 2023: நண்பகல் 3 மணி நிலவரப்படி 52.18% வாக்குப்பதிவு!

கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மதியம் 3 மணி நிலவரப்படி 52. 18 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Karnataka Election
Karnataka Election
author img

By

Published : May 10, 2023, 4:17 PM IST

பெங்களூரு : கர்நாடகாவில் மதியம் 3 மணி நிலவரப்படி 52. 18 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. 224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு இன்று ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது.

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் வாக்குகளை ஆர்வமாக செலுத்தி வருகின்றனர். சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டுத் துறை சார்ந்த பிரபலங்களும் தங்களது வாக்குகளை ஆர்வமாக செலுத்தி வருகின்றனர். ஆட்சியைத் தக்கவைக்க பாஜகவும், மீண்டும் ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளும் தீவிர முனைப்புடன் காத்திருக்கின்றன.

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்ற பொன்மொழிக்கு ஏற்ப 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் காணப்படுகிறது. இதனால், ஆட்சியைத் தக்கவைக்க பாஜக போராடி வருகிறது. மேலும் தென் இந்திய மாநிலங்களில் பாஜகவால் கர்நாடகாவைத் தவிர்த்து வேறெங்கும் காலூன்ற முடியவில்லை என்றே கூறலாம்.

இதனால் தென்னிந்திய மாநிலங்களின் வாசலாக கருதப்படும் கர்நாடகாவில் ஆட்சியை அமைக்க பாஜக மும்முனை திட்டங்களை வகுத்து வருவதாக கூறப்படுகிறது. அதேபோல், தென் மாநிலங்களில் தனது கட்சியை பலப்படுத்தவும், 2024ஆம் ஆண்டு பாஜகவுக்கு எதிரான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை வலுப்படுத்தும் திட்டத்திலும் காங்கிரஸ் ஈடுபட்டு வருகிறது.

இதனால் கர்நாடகாவில் யார் ஆட்சி அமைக்கப்போகிறார்கள் என்ற உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இதனிடையே காலை முதலே மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களைது வாக்குகளை ஆர்வமாக செலுத்தி வருகின்றனர். கர்நாடக முன்னாள் முதலமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான எடியூரப்பா, ஷிவமோகா தொகுதியில் உள்ள அதாலித்த சவுதா மையத்தில் தனது வாக்கைப் பதிவு செய்தார்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெங்களூருவில் உள்ள வாக்குச்சாவடியில் தனது குடும்பத்தினருடன் சென்று வாக்கு செலுத்தினார். கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார் தனது வாக்கைப் பதிவு செய்தார். கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, ஷிகான் தொகுதிக்குட்பட்ட வாக்குச் சாவடியில் பொது மக்களுடன் வரிசையில் நின்று, தனது வாக்கைப் பதிவு செய்தார்.

அவரைப் போல் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, கர்நாடக அமைச்சர் நாராயண கவுடா, கன்னட நடிகர்கள் பிரகாஷ் ராஜ், கணேஷ், ரமேஷ் அரவிந்த், மறைந்த புனித் ராஜ்குமார் சகோதரர் மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்டோரும் தங்களது வாக்கைப் பதிவு செய்தனர். வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்,மதியம் 3 மணி நிலவரப்படி, 52. 18 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

இதையும் படிங்க : Karnataka Assembly Polls : அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் வாக்குப்பதிவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.