ETV Bharat / bharat

'அடுத்த 10 ஆண்டுகள் மாநிலம் தழுவிய பயணம்'- எடியூரப்பா திடீர் அறிவிப்பு!

அடுத்த 10 ஆண்டுகள் மாநிலம் தழுவிய அளவில் பயணம் மேற்கொள்ள இருப்பதாக 79 வயதான எடியூரப்பா அதிரடியாக அறிவித்துள்ளார்.

Yediyurappa
Yediyurappa
author img

By

Published : Jun 8, 2022, 1:07 PM IST

பெலகாவி (கர்நாடகா): “வரும் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் தோல்வியை சந்திக்கும்; சித்த ராமையா விரக்தியின் உச்சத்தில் உள்ளார்" என மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், பாஜக மூத்தத் தலைவருமான பி.எஸ். எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் பெலகாவியில் முன்னாள் முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “வரும் சட்டப்பேரவை தேர்தலை கூட்டுத் தலைமையின் கீழ் சந்தித்து வெற்றி பெறுவோம்” என்றார். மேலும், “அடுத்த 10 ஆண்டுகள் மாநிலம் தழுவிய பயணம் மேற்கொண்டு கட்சியை மேலும்மேலும் வலுப்படுத்தப்போவதாகவும்” அவர் தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் பதில் அளித்தார்.

அப்போது, ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக தலைவர்கள் குறித்து தொடர்ந்து சித்த ராமையா கடுமையாக விமர்சித்து வருகிறாரே என்ற கேள்விக்கு, “அவரின் கட்சி தோல்வியின் விளிம்பில் உள்ளது. ஆகவே காங்கிரஸ் கட்சி குறித்து பேச அவர்களிடம் எதுவும் இல்லை. எனவே பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் குறித்து விமர்சிக்கின்றனர்” என்றார். மேலும், “சித்த ராமையா விரக்தியின் உச்சத்தில் உள்ளார்” என்றும் கூறினார்.

கர்நாடக மாநிலத்திற்கு அடுத்த ஆண்டு (2023) சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இங்கு பாஜக, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் என மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. கர்நாடகத்தில் லிங்காயத் சமூகத்தினரை அரசியல் ரீதியாக ஒருங்கிணைத்து பாஜகவின் வாக்குவங்கி ஆக மாற்றியதில் எடியூரப்பாவுக்கு பெரும்பங்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கர்நாடகத்தில் பொம்மை ஆட்சி.. பலிக்குமா எடியூரப்பா கனவு?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.