ETV Bharat / bharat

கார்கில் வெற்றி தினம் கொண்டாட்டம் - Kargil Vijay Diwas

கார்கில் வெற்றி தினம் இன்று(ஜூலை 26) கொண்டாடப்படுகிறது.

கார்கில் தியாக  நினைவு தினம் இன்று
கார்கில் தியாக நினைவு தினம் இன்று
author img

By

Published : Jul 26, 2022, 10:41 AM IST

ஜம்மூ-காஷ்மீர் மாநிலம் கார்கில் பகுதியில் இந்திய எல்லைப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் படைகளை அப்புறப்படுத்தும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டது. இந்திய- பாகிஸ்தான் எல்லையான கார்கிலில் 1999 ஆம் ஆண்டு மே முதல் ஜூலை வரை போர் நடந்தது.

மே 1999இல் பாகிஸ்தான் இராணுவமும், தீவிரவாதிகளும் பாகிஸ்தானிலிருந்து எல்லையைத் தாண்டி இந்தியாவிற்குள் நுழைந்ததே போருக்கு முக்கிய காரணமாகும். இருப்பினும் போரின் ஆரம்பத்தில் பாகிஸ்தான் இதற்கான முழு பொறுப்பும் காஷ்மீர் தீவிரவாதிகள் மீது பழி சுமத்தியது.

ஆனால், உயிரிழந்த வீரர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மூலமாகவும், போருக்குப்பின் பாகிஸ்தான் பிரதமர் மற்றும் பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஆகியோர் விடுத்த அறிக்கைகள் மூலமாகவும், பாகிஸ்தான் துணை இராணுவப் படையினர், தளபதி அஷ்ரஃப் ரஷீத் தலைமையில் போரில் ஈடுபட்டது உறுதியானது.

பல சவால்களுக்கு மத்தியில்  போரிட்ட இந்திய வீரர்கள்

மே மாதம் தொடங்கிய இந்த போரில் இந்திய வான் படை மூலம் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு பகுதிகளை மீட்க்கப்பட்டது. பாகிஸ்தானின் இந்த செயலுக்கு பல நாடுகள் கண்டனம் தெரிவித்தன. இதன் தொடர்ச்சியாக பாகிஸ்தானும் போரை கைவிட்டது.

கார்கில் நகரம்
கார்கில் நகரம்

முன்னதாக 1947 ஆம் ஆண்டு நடந்த காஷ்மீர் போருக்குப் பின் காஷ்மீர் மாநிலத்தோடு கார்கில் பரப்பு இணைக்கப்பட்டது. இந்நகரம் ஸ்ரீநகரில் இருந்து 205 கி.மீ தொலைவில் இருந்தது. உயர்ந்த மலைப்பகுதியில் பல சவால்களை எதிர்கொண்டு நடந்தது. இதில் அணு ஆயுதங்கள் கொண்ட இரு நாடுகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த போரில் மொத்தம் 527 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

ஆயிரத்திற்கும் அதிகமான வீரர்கள் படுகாயமடைந்தனர். பாகிஸ்தான் படைகளை முற்றிலுமாக வெற்றி கொள்ள அன்றைய பிரதமர் வாஜ்பாய் ‘விஜய்’ என்ற சிறப்பு நடவடிக்கையை அமல்படுத்தினர். 1999 ஆம் ஆண்டு ஜூலை 14 அன்று விஜய் நடவடிக்கை வெற்றி பெற்றதாக வாஜ்பாய் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து சில நாட்களில் இந்தியாவிற்குள் ஊடுருவிய பாகிஸ்தானியர்கள் முற்றிலுமாக வெளியேறினர்.

காரிகில் நினைவுச் சின்னம்
காரிகில் நினைவுச் சின்னம்

இந்தப் போரின் போது அன்றைய அமெரிக்க அதிபரான பில் கிளிண்டன் , பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு போரை நிறுத்துமாறு வலியுறுத்தினார்.

கார்கில் தினம் : கார்கில் முழுவதுமாக இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்த ஜூலை 26 ஆம் தேதியை கார்கில் தினமாக அரசு அறிவித்தது. இந்நாளில் கார்கிலுக்காக உயிர் நீத்த ராணுவ அதிகாரிகளையும், இந்தியாவின் பெருமிதத்தையும் நினைவு கூறப்படுகிறது.இன்றும் லடாக்கின் கார்கில் பொதுமக்கள் ராணுவப்படையினருடன் இந்நாளை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

குடியரசுத் தலைவர் ட்வீட்:கார்கில் தினம் குறித்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு விடுத்துள்ள ட்விட்டர் பக்கத்தில், ‘கார்கில் போர் ஆயுதப் படைகளின் அசாதாரண வீரத்தின் சின்னம் என்றும், நாட்டை காக்க தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த துணிச்சலான வீரர்களுக்கு மக்கள் என்றும் கடமைப்பட்டிருப்பார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:கார்கில் போர் நிகழ்வுகள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.