பெங்களூர்: கன்னட தலித் எழுத்தாளர் சித்தலிங்கையா கோவிட் பெருந்தொற்றால் நேற்று பெங்களூரில் காலமானார். அவரின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெற்றது.
முன்னதாக, சித்தலிங்கையாவின் உடல் பெங்களூர் பல்கலைக்கழகத்தில் உள்ள அம்பேத்கர் படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. மாணவர்கள், வாசகர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி சித்தலிங்கையாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
மேலும், கர்நாடாக மாநில உள்துறை அமைச்சர் பொம்மை, அமைச்சர் ஆர். அசோக், பெங்களூர் நகர ஆட்சியர் மஞ்சுநாத் உள்ளிட்டோரும் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
சித்தலிங்கையாவின் இறுதிச்சடங்கு பௌத்த முறைப்படி நடைபெற்றது. சித்தலிங்கையா 1994ஆம் ஆண்டு அம்மாநில சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அயோத்திதாசர் யார்? சாதி ஒழிப்பில் அவரது பங்கு என்ன?