ஒன்றிய அரசு அண்மையில் 1952-ஆம் ஆண்டு ஒளிப்பதிவு சட்டத்தில் சில முக்கிய திருத்தங்களை செய்து வரைவு ஒளிப்பதிவு (திருத்த) மசோதா 2021 என வெளியிட்டுள்ளது.
இந்த மசோதாவுக்கு எதிராக கமல் ஹாசன், சூர்யா, கார்த்தி, விஷால் உள்ளிட்ட பல முன்னனி நடிகர்களும், இயக்குநர்களும் குரல் கொடுத்து வருகின்றனர். இந்த எதிர்பை அடுத்து மசோதா குறித்தான கருத்தை ஒன்றிய அரசு கேட்டு வருகிறது.
இந்நிலையில், நாடாளுமன்ற நிலைக்குழு, ஒளிப்பதிவு சட்டத்திருத்த மசோதா குறித்தான திரையுலகினரின் கருத்துகளை கேட்கவுள்ளது.
அந்தவகையில், இன்று (ஜூலை.27) மாலை நடைபெறும் இந்த கலந்துரையாடலில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் ஹாசன் கலந்துகொண்டு தனது கருத்தை தெரிவிக்கவுள்ளார்.
இதையும் படிங்க: சூர்யாவுக்கு யாரும் ஆதரவு தரவில்லை: இயக்குநர் அமீர் ஆவேசம்