தமிழ்நாடு, புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் திமுகவினர் கருணாநிதியின் 98ஆவது பிறந்தநாளை மிகச் சிறப்பாகக் கொண்டாடிவருகின்றனர்.
இந்நிலையில், புதுச்சேரி தெற்கு மாநில அமைப்பாளர் எஸ்.பி. சிவக்குமார் ஆலோசனைப்படி திமுக இளைஞர் அணித் துணை அமைப்பாளர் மோகன் தலைமையில் புதுச்சேரி வாழைகுளம் எஸ்வி பட்டேல் சாலை சந்திப்பில் ஏழை எளிய மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு பால், பிரெட் கொடுத்து கொண்டாடினர்.
இந்த நிகழ்ச்சியில் ரெமோ, சரத், மகேந்திரன், கீர்த்தி கலைவாணன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: 'கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டேன்; தலைநிமிர்ந்து வருகிறேன்' - மு.க. ஸ்டாலின்