மேஷம்: பல விதமான விஷயங்கள் மீது ஈர்ப்பு கொள்வீர்கள். ஆனால் மின்னுவது அனைத்தும் பொன்னல்ல என்பதை நினைவில் கொள்ளவும். குடும்ப உறுப்பினர்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள அவர்களுடன் நேரம் செலவிடுவது மிகவும் முக்கியம். குழந்தைகளுக்காக பரிசுப் பொருள் ஏதேனும் வாங்கும் சாத்தியம் உள்ளது.
ரிஷபம்: சிந்தனை மிகுந்த நாளாகவும், ஆதாயமான நாளாகவும் இருக்கும். நீங்கள் எதிர்பார்த்தபடி விஷயங்கள் நடக்கவில்லை என்றால், ஏமாற்றம் கொள்ள வேண்டாம். இதனால் மோசமான விளைவுகள் எதுவும் ஏற்படாது என்பதை நினைவில் கொள்ளவும். கிரக நிலைகள் சாதகமாக மாறி நன்மைகள் உண்டாகும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
மிதுனம்: சிந்தனையில் மூழ்கி இருப்பீர்கள். சிறிய சந்தோஷங்கள் மூலம் மகிழ்ச்சி அடைவீர்கள். பணியில் சிறந்து விளங்கினாலும், நீங்கள் வீட்டில் சாதித்ததை விட குறைவானதாகவே அது இருக்கும்.
கடகம்: உங்கள் முயற்சிக்கான பலன்கள் கிடைத்து, சமூக அந்தஸ்தும் மதிப்பும் உயரும். உங்கள் கருணையான மனிதாபிமான நடவடிக்கைகள் இன்று வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும். பொழுதுபோக்கு அம்சங்களுக்காக அதிகம் செலவழிப்பீர்கள். வேலைப்பளுவுடன் குதூகலமும் இருக்கும்.
சிம்மம்: உற்சாகமும் ஆற்றலும் அதிகம் இருப்பதால், வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் சிறந்து விளங்குவீர்கள். மற்றவர்கள் உங்களை பாராட்டவில்லை என்றால், சிறிது மனம் வருத்தம் அடைவீர்கள். இன்று எடுத்துக் கொள்ளும் அனைத்து விஷயங்களிலும், நிதி நிலைமை குறித்து ஆராய்வீர்கள்.
கன்னி: பொதுவாக பெண்களுக்கு சிறந்த நாளாக இருக்கும். மாலையில் இறுக்கமான உறவில் இருப்பவர்களுக்கு விருந்து கொடுக்கலாம். மனதிற்கு பிடித்தவருடன் இனிமையாக பொழுதைக் கழிக்கும் வாய்ப்பு அதிகம் உண்டு.
துலாம்: உங்களுக்குப் பிடித்த ஆடையை அணிந்து கொண்டு தயாராக இருக்கவும். ஏனென்றால், பணியிடத்தில் உங்கள் மீது அனைவரும் கவனம் செலுத்துவார்கள். உங்கள் கடின உழைப்பு, செயல்திறன் ஆகியவற்றிற்கு நல்ல பலன் கிடைக்கும். சக பணியாளர்கள், தங்களால் இயன்ற அளவுக்கு உங்களுக்கு உதவுவார்கள். கிரக நிலைகள் சாதகமாக உள்ளதன் காரணமாக அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள்.
விருச்சிகம்: விஷயங்கள் எப்படி தலைகீழாக மாறுகின்றன என்பதை உணரலாம். நீங்கள் நம்பும் விஷயங்களை குறித்து மட்டும் பேசவும். இது சச்சரவுகளை தவிர்க்கும். நெருக்கமானவர்களுடன் பழகும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
தனுசு: உடன் பணிபுரிபவர்கள், பணியிடத்தில் உங்களது நேர்மறையான நடவடிக்கைகள் காரணமாக பிசியாக இருப்பார்கள். பலரை நீங்கள் சந்திக்கக் கூடும் என்பதால், சமூகத்தில் பழகும் உங்கள் திறனை மேம்படுத்திக் கொள்ளவும். மாலையில் மனதுக்கு பிடித்தவர்களுடன் தனிமையில் நேரம் செலவழிக்கும் வாய்ப்பும் கிடைக்கும்.
மகரம்: வேடிக்கையாக பேசி அனைவரையும் மகிழ்விக்கும் உங்கள் திறன் மூலமாக, உங்களைச் சுற்றியுள்ள அனைவரையும் நீங்கள் சந்தோஷப்படுத்துவீர்கள். வருங்காலத்திலும் உங்களுடன் நேரம் செலவிடுவதை அவர்கள் விரும்புவார்கள். பிரச்னைகளை எளிதாக தீர்க்கும் உங்களது திறமையின் காரணமாக அனைவரையும் ஈர்ப்பீர்கள்.
கும்பம்: உறுதிப்பாடு, செயல்திறன் ஆகியவற்றின் காரணமாக தனித்துவம் பெற்று விளங்குவீர்கள். இன்று மதியம் மிகவும் சுறுசுறுப்பாக உணர்வீர்கள். அதன் மூலம் மற்றவர்களது வேலையையும் நிறைவேற்றித் தர ஒப்புக் கொள்வீர்கள்.
மீனம்: சட்ட வழக்குகள் மூலம் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளீர்கள். அதற்கு ஒரு திருப்தியான முடிவு ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. நிதி நிலைமை நன்றாக இருக்கும். மதியம் குடும்ப விஷயங்கள் தொடர்பான பணிகளை நிறைவேற்றுவீர்கள். மாலையில் இசை அல்லது நடன வகுப்புகளுக்குச் செல்லும் வாய்ப்பு உள்ளது.