டெல்லி: ரிலையன்ஸ் நிறுவனத்தின் 45ஆம் ஆண்டு பொதுக்கூட்டத்தில் பேசிய ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, "எங்கள் பான் இந்தியா 5ஜி நெட்வெர்க்கை உருவாக்க, 2 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளோம். நாடு முழுவதும் அதிவேகமாக செயல்படும் 5ஜி தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளோம்.
அடுத்த இரண்டு மாதங்களுக்குள், அதாவது வரும் தீபாவளிக்குள், டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா ஆகிய நான்கு மெட்ரோ நகரங்கள் உட்பட பல முக்கிய நகரங்களில் ஜியோ 5ஜி சேவையை அறிமுகப்படுத்துவோம்.
டிசம்பர் 2023-க்குள் நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் 5ஜி சேவையை வழங்கத் திட்டமிட்டுள்ளோம். மிக உயர்ந்த தரத்திலான 5ஜி சேவையை மலிவான விலைக்கு கொடுப்போம். ஃபிக்ஸட் பிராட்பேண்ட் அடாப்டேஷன் தொழில்நுட்பத்தில் உலக அளவில் இந்தியா 138ஆவது இடத்தில் உள்ளது. இதில் ஜியோ நிறுவனம் இந்தியாவை உலக அளவில் முதல் 10 இடங்களுக்குள் கொண்டு செல்லும்" என்று கூறினார்.
இதையும் படிங்க: குழந்தையின் நிர்வாணப் புகைப்படத்தைப் பதிவிட்டதாக பெற்றோர் மீது கூகுள் புகார்