ETV Bharat / bharat

ஜார்கண்டில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்து... 30 பேர் பலியா? - Jharkhand

ஜார்கண்டில் பரகிர் ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பேருந்தில் 30 பேர் வரை பயணித்ததாக கூறப்படும் நிலையில், அவர்களின் கதி என்ற அச்சம் பீதியை கிளப்பி உள்ளது.

Jharkhand
Jharkhand
author img

By

Published : Aug 5, 2023, 10:36 PM IST

கிரிதிஹ் : ஜார்கண்ட் மாநிலத்தில் 30 பயணிகளுடன் சென்ற பேருந்து திடீரென ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்தவர்களில் பலர் உயிரிழந்து இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இருந்து கிரிதிஹ் நகர் நோக்கி 30 பயணிகளுடன் பேருந்து சென்று கொண்டு இருந்தது. பரகிர் நதியின் வழியே பேருந்து சென்று கொண்டு இருந்த போது திடீரென விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. கிரிதஹ் - தும்ரி சாலையை கடக்கும் போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து விபத்துக்குள்ளாகி பரகிர் ஆற்றி கவிழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த விபத்தின் போது பேருந்தில் 30 பேர வரை பயணித்ததாக கூறப்படுகிறது. பரகிர் ஆற்று பகுதியில் போலீசார், மற்றும் மீட்பு குழுவினர் இணைந்து பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். மீட்பு குழுவினருடன் இணைந்து உள்ளூர் கிராம மக்களும் பயணிகளை தேடும் பணியில் ஈடுபட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஏறத்தாழ 30 பேர் வரை பேருந்தில் பயணித்ததாக கூறப்படும் நிலையில், உயிரிழப்பு அதிகளவில் இருக்கலாம் என போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க : 13வயது மோட்டர்சைக்கிள் வீரர் உயிரிழப்பு... பயந்தத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த பரிதாபம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.