ETV Bharat / bharat

'லவ் ஜிகாத்திற்கு எதிராக அவசரச் சட்டத்தை ஜே.டி.யு. கொண்டுவர வேண்டும்' - பாஜக - பாஜக மூத்த தலைவரும், செய்தித் தொடர்பாளருமான பிரேம் ரஞ்சன்

பாட்னா: உத்தரப் பிரதேசம்போல பிகாரிலும் சட்டவிரோத மத மாற்றத்தைத் தடுப்பதற்கு அவசரச் சட்டத்தை ஜே.டி.யு. கொண்டுவர வேண்டுமென பாஜக மூத்தத் தலைவரும், செய்தித் தொடர்பாளருமான பிரேம் ரஞ்சன் வலியுறுத்தியுள்ளார்.

JD(U) must support us in bringing law against love jihad: BJP
“லவ் ஜிகாத்திற்கு எதிராக அவசரச் சட்டத்தை ஜே.டி.யூ கொண்டுவர வேண்டும்” - பிரேம் ரஞ்சன்
author img

By

Published : Jan 8, 2021, 7:21 PM IST

இது தொடர்பாக நமது ஈடிவி பாரத்திடம் பேசிய அவர், “காதல் என்ற போர்வையில் ஆசைவார்த்தைகள் கூறி அப்பாவியான இளம்பெண்கள் ஏமாற்றப்படுகிறார்கள்.

கட்டாயப்படுத்தியோ, ஆசைவார்த்தைகள் கூறியோ நடைபெறும் மதம் மாற்று திருமணங்களைத் தடைசெய்ய வேண்டும். இந்துப் பெண்களின் பாதுகாப்பு குறித்து பாஜக மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. இந்துப் பெண்களை இஸ்லாமிய ஆண்கள் ஏமாற்றித் திருமணம் செய்துகொண்டு மதம் மாற்றுகிறார்கள்.

காதல் என்ற பெயரில் இந்துப் பெண்களை யாரும் மதமாற்றம் செய்யக் கூடாது. அவ்வாறு மத மாற்றம் செய்ய யாருக்கும் உரிமை இல்லை.

அதிகரித்துவரும் கட்டாய மத மாற்றங்களைக் கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. லவ் ஜிகாத் அச்சுறுத்தலை வேரறுக்க வேண்டும். உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களைப் போல பிகாரிலும் மதமாற்றத்திற்கு எதிரான சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்.

மாநிலத்தில் காதல் என்ற பெயரில் லவ் ஜிகாத்துக்கு நாங்கள் அனுமதிக்கமாட்டோம். இதற்கு எதிராகச் சட்ட விதிகள் கொண்டுவரப்படும். இந்தக் குற்றத்திற்கு உதவிசெய்பவர்கள் மீது வழக்குப் பதிந்து, கைதுசெய்ய வேண்டும்.

அதிக எண்ணிக்கையிலான நபா்கள் ஒரே நேரத்தில் மதமாற்றம் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டால், அந்த நடவடிக்கையில் ஈடுபட்ட சமூக அமைப்பின் பதிவு ரத்துசெய்யப்பட வேண்டும் என்பதோடு, அந்த அமைப்பாளா்கள் மீது கடுமையான நவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

பிகார் மாநிலத்திலும் கட்டாய மத மாற்றத்துக்கு எதிரான சட்டம் கொண்டுவரப்பட வேண்டும். அதற்கு ஆளும் ஜே.டி.யு. ஆதரவாகச் செயல்பட வேண்டும்.

ஜே.டி.யு. அதை ஆதரிப்பதா இல்லையா என்பதைத் தலைவர் மீண்டும் வலியுறுத்தினார், அதன் நட்பு நாடு சட்டத்தை ஆதரிக்க வேண்டும், இந்த அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த ஒரு கடினமான சட்டத்தைக் கொண்டுவர பாஜகவுக்கு உதவ வேண்டும்.

“லவ் ஜிகாத்திற்கு எதிராக அவசரச் சட்டத்தை ஜே.டி.யூ கொண்டுவர வேண்டும்” -   பிரேம் ரஞ்சன்
'லவ் ஜிகாத்திற்கு எதிராக அவசரச் சட்டத்தை ஜே.டி.யு. கொண்டுவர வேண்டும்' - பிரேம் ரஞ்சன்

ஜம்மு-காஷ்மீர் சிறப்பு உரிமை 370 & 35 ஏ, முத்தலாக் தடைச் சட்டம் சி.ஏ.ஏ. ஆகியவற்றைப் போன்ற சட்டங்களை ஆதரித்ததுபோல ஜே.டி.யு. சட்டவிரோத மதமாற்றத்திற்குத் தடைவிதிக்க வேண்டுமென்ற பாஜகவின் நிலைபாட்டை ஆதரிக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.

இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவை சட்டவிரோத மதமாற்ற தடைச் சட்ட மசோதாவுக்கு 2019ஆம் ஆண்டு ஒப்புதல் அளித்தது. ஹரியானா மாநில அரசு, இந்தத் தடைச்சட்ட வரைவை உருவாக்க மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்திருந்தது.

இதையும் படிங்க : இஸ்ரோவின் அடுத்தகட்ட திட்டங்கள்: ஈடிவி பாரத்துடன் சிவனின் பிரத்யேகப் பேட்டி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.