சென்னை: நடிகர் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படம், உலகளவில் 735 கோடியைக் கடந்து வசூலில் புதிய சாதனை படைத்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரெட் சில்லிஸ் எண்டர்டெய்மெண்ட் தயாரிப்பில், அட்லீ இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான் நடித்த ஜவான் திரைப்படம், கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
-
Jab woh villain banta hai na toh uske saamne koi bhi hero tik nahin sakta... and, the rest is history! 🔥
— Red Chillies Entertainment (@RedChilliesEnt) September 16, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Book your tickets now: https://t.co/B5xelUahHO
Watch #Jawan in cinemas - in Hindi, Tamil & Telugu. pic.twitter.com/L58pAMNcoQ
">Jab woh villain banta hai na toh uske saamne koi bhi hero tik nahin sakta... and, the rest is history! 🔥
— Red Chillies Entertainment (@RedChilliesEnt) September 16, 2023
Book your tickets now: https://t.co/B5xelUahHO
Watch #Jawan in cinemas - in Hindi, Tamil & Telugu. pic.twitter.com/L58pAMNcoQJab woh villain banta hai na toh uske saamne koi bhi hero tik nahin sakta... and, the rest is history! 🔥
— Red Chillies Entertainment (@RedChilliesEnt) September 16, 2023
Book your tickets now: https://t.co/B5xelUahHO
Watch #Jawan in cinemas - in Hindi, Tamil & Telugu. pic.twitter.com/L58pAMNcoQ
'ஜவான்' படம் வெளியானதில் இருந்தே வசூலில் பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகிறது. முதல் நாளே ரூ.129.6 கோடி வசூலித்து, பாலிவுட் திரையுலகில் முதல் நாள் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையைப் படைத்தது. இரண்டாவது நாளில் இப்படம் ரூ.240 கோடி வசூலித்தது. மூன்றாவது நாள் படம் உலக அளவில் ரூ.ரூ.384.69 கோடி வசூலித்தது.
5 நாட்கள் முடிவில் ரூ.574.89 கோடியை வசூலித்ததாக படக்குழு அறிவித்திருந்தது. ரூ.300 கோடி பட்ஜெட்டில் உருவானதாகக் கூறப்படும் இப்படம், 8 நாட்களில் ரூ.696.12 கோடியை வசூலித்து மிரட்டி வருகிறது. தற்போது வரை பட்ஜெட்டை விட இரண்டு மடங்கு லாபம் பார்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது 9 நாள் முடிவில் 'ஜவான்' படம் உலகளவில் பாக்ஸ் ஆபிஸில் ரூ.735.02 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜவான் படத்தின் தொடர் வசூல் வேட்டை படக்குழுவினருக்கு உச்சக்கட்ட மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இதனிடையே இரு தினங்களுக்கு முன்னர் ஜவான் சக்சஸ் மீட் மும்பையில் நடைபெற்றது. இதில் ஷாருக்கான், விஜய் சேதுபதி, அட்லீ, தீபிகா படுகோன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஜவான் இசை வெளியீட்டு விழாவைத் தொடர்ந்து, சக்சஸ் மீட்டிங்கிலும் நயன்தாரா பங்கேற்கவில்லை எனத் தெரிகிறது. படம் வெளியான சமயத்தில் பல படங்களின் சாயல் இருப்பதாக கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இது தொடர்பாக அட்லீயும் ட்ரோல் செய்யப்பட்ட வந்தார்.
இதையெல்லாம் தாண்டி 'ஜவான்' படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது. மேலும், விநாயகர் சதுர்த்தி விடுமுறை தினத்தை முன்னிட்டு ஜவான் படத்திற்கு ரசிகர்கள் படையெடுத்து வருகின்றனர். அதன்படி, வரும் நாட்களில் 1,000 கோடி ரூபாய் வரை வசூல் சாதனையில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து திரைப்பட வர்த்தக ஆய்வாளர் ரமேஷ் கூறுகையில், “கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி வெளியான ஜவான் பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனைகளைப் படைத்துள்ளது. ஷாருக்கான் நடிப்பில் இதற்கு முன் வெளியான பதான் திரைப்படம், உலகளவில் ரூ.1,000 கோடி வசூல் செய்தது. அதேபோல் ஜவான் திரைப்படமும் ரூ.1,000 கோடி வசூல் சாதனை படைத்தால், அது இந்தி சினிமாவுக்கு நிச்சயம் ஒரு "அபூர்வ நிகழ்வாக" இருக்கும்” என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மிஷ்கினுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்த விஜய் ரசிகர்கள் - காரணம் என்ன?