மும்பை : மகாராஷ்டிராவில் இன்று பல முக்கிய நகரங்கள் காணப்படுகின்றன. ஆனால் அவை சிலரின் தொலைநோக்குப் பார்வையாலும், அவர்களது கடின உழைப்பாலும் காண்போர் மெச்சும் அளவுக்கு நகரங்களாக வளர்ந்து முக்கியத்துவம் பெற்று உள்ளன. அடிப்படையில், ஒவ்வொரு நகரத்திற்கும் அதன் சொந்த சுற்றுச்சூழல் அமைப்பு உள்ளது.
இந்திய சுதந்திர போராட்ட வீரர், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர், மாநிலங்களவை உறுப்பினர் என பன்முகம் கொண்ட ஜவஹர்லால் தர்தா என்ற பாபுஜிக்கு நன்றாகத் தெரியும், எந்த ஒரு நகரத்தின் வானிலை, நீர் மற்றும் வளங்களை அதன் வளர்ச்சியைத் திட்டமிடும் முன் கருத்தில் கொள்ள வேண்டும் என்று. அவருடைய புரிதல் நகரத்தில் மட்டும் இல்லாமல் மாநிலம் முழுவதற்கும் பரவியது.
பாபுஜி தொழில்துறை அமைச்சராக இருந்த காலத்தில் நாக்பூருக்கு அருகில் புட்டிபோரியில் தொழிற்பேட்டை அமைக்க வேண்டும் என்று கூறப்பட்டது. இருப்பினும், அவரது ஆட்சிக் காலத்தில் தான் நாசிக் மற்றும் சம்பாஜி நகர் நகரங்கள் தொழில் மயமாக மாறத் தொடங்கின.சாம்பாஜிநகர் தொழிற்பேட்டைக்கு இன்று நூற்றுக்கணக்கான தொழில் நிறுவனங்கள் வர அடித்தளமிட்டவர் பாபுஜி என்பதை இன்றைய தலைமுறைக்கு சொல்லியாக வேண்டும்.
தலைமைத்துவம் என்பது கடந்த காலத்தை பரிசீலனை செய்யும் வகையிலும், நிகழ்காலத்தில் வாழக் கூடியதாகவும், அதேநேரம் எதிர்காலத்தோடு தொடர்புடையதாகவும் இருக்க வேண்டும். அந்த திறன் பாபுஜியிடம் காணப்பட்டது. அதனால் தான் சில நகரங்களின் தலை விதியையே மாற்றும் முடிவுகளை அவர் எடுத்து உள்ளார். பாபுஜி மாநில அரசியலில் இருந்த போது, மகாராஷ்டிரா காங்கிரஸ் கட்சியில் ஏராளமான தலைவர்கள் இருந்தனர்.
வசந்தராவ் நாயக், சுதாகர்ராவ் நாயக், வழக்கறிஞர் ஏ.ஆர் அந்துலே, விலாஸ்ராவ் தேஷ்முக் மற்றும் சுஷில்குமார் ஷிண்டே உள்பட பல பெயர்களை பட்டியலிடலாம். இருப்பினும், ஜவஹர்லால் தர்தா, அனைவருடனும் நன்றாக பழகக் கூடியவர்களில் ஒருவராக காணப்பட்டார். காங்கிரஸ் தலைவர்களுக்குள் ஏதேனும் கருத்து வேறுபாடுகள் இருந்தால் அதைத் தீர்க்க கடினமாகவும் உழைத்தார். அவரது குணம், பணியாற்றும் பாணி மற்றும் முழு ஆளுமையும் காங்கிரஸ் கட்சியில் அவரது முக்கியத்துவத்தை கொண்டு இருந்தன. அதன் காரணமாக காங்கிரஸ் கட்சியில் யாரும் தட்டமுடியாத சிறந்த ஆளுமையை கொண்டு இருந்தார்.
எதிர் கட்சிளை கூட அவர் அணுகும் பாணி மிகவும் வித்தியாசமானதாக இருந்தது. அரசியலில் இப்படி ஒருவர் இருப்பது கடினம் என்றே கூறப்பட்டது. மூத்த வயதானாலும் அவருக்கு ஒரு மூத்தவர் என்ற குணம் இல்லாமல் இளம் தலைமுறையினருடன் இணக்கமான மற்றும் நெருக்கமான உறவு கொண்டு இருந்தார். இளம் தலைவர்களுக்கு ஏற்றார் வகையில் அவர்களுடன் கலந்துரையாடி பாலமாக இருந்து உள்ளார்.
மறைந்த யஷ்வந்த்ராவ் சவான் பலருக்கு அரசியல் வழிகாட்டியாக இருந்தாலும், அரசியல் மற்றும் சமூகத் துறையில் உள்ள பலரிடம் இருந்து சில புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ள உந்துகோளாக இருந்து உள்ளார். அதேபோல் ஜவஹர்லால் தர்தாவும் பலருக்கு சில சமயங்களில் வழிகாட்டியாக, சில சமயங்களில் நண்பனாக, சரியான பாதையை காட்டுபவராக இருந்து உள்ளார்.
அரசியலில் நேர்மறை எண்ணம் கொண்டவராக இருப்பது முக்கியமானது அதற்கு, ஒரு மனிதனாக உன்னத குணங்களை கொண்டவராக இருப்பது அவசியம். அப்படி பாபுஜிக்கு அந்த அருளும் நட்பும் இருந்தது. வேறுபாடுகளுக்கு அப்பால் ஒரு மனிதன் இருக்கிறான் என்று நம்பக் கூடியவராக இருந்தார்.
என்ன தான் வயதில் மூத்தவராக இருந்தாலும், அவர் ஒருபோதும் தன்னை உயர்ந்தவராகக் காட்டிக் கொண்டதில்லை. அமைச்சரவையில் பணிபுரியும் போதும், கூட்டங்களின் போதும் சக ஊழியர்களிடம் மனதில் உள்ள யோசனைகளை பற்றி அடிக்கடி கேட்பார். யோசனைகள் இன்னும் சரியான வடிவத்தில் மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதே அதன் பின்னணியில் உள்ள நோக்கமாக இருந்தது.
ஜவஹர்லால் தர்தாவின் பெயர் சமூக சேவகர், அரசியல்வாதி, செய்தித்தாள் நிறுவனர், தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர் மற்றும் கருணை உள்ளம் கொண்டவர் என வரலாற்றில் நிச்சயம் இடம் பெறும்.
இதையும் படிங்க : யமுனையில் வெள்ளப் பெருக்கு.. "டெல்லிக்கு வெள்ள அபாயம்"... அமித் ஷாவுக்கு, கெஜ்ரிவால் கடிதம்!