டெல்லியில் காற்று மாசுபாட்டை குறைக்க ஏதுவாக அம்மாநில முன்னாள் தலைமைச் செயலர் எம்.எம். குட்டி தலைமையில் ஒரு ஆணையத்தை மத்திய அரசு அமைத்துள்ளது. இந்த ஆணையம் தனது பணியை விரைவில் தொடங்கவுள்ளது என்றும், அண்டை மாநிலங்களுடன் இணைந்து வட இந்தியாவில் காற்று மாசுபாட்டைக் குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளும் என்றும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.
மேலும், டெல்லி மற்றும் வட இந்தியாவில் காற்று மாசுபாட்டை குறைக்க மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துவருகிறது என்றும், அதற்குத் தேவையான அனைத்து தொழில்நுட்ப ரீதியான சாதனங்களையும் பயன்படுத்த மத்திய அரசு தயாராக உள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.
அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார அமைச்சகத்தின் உயர் அலுவலர்கள், டெல்லி, ஹரியானா, பஞ்சாப் அரசின் உயர் அலுவலர்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்
இந்த ஆணையத்தின் தலைவராக பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் முன்னாள் செயலர் டாக்டர் எம்.எம். குட்டி, குழுவின் முழுநேர உறுப்பினராக சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் இணைச் செயலர் அரவிந்த் கே நௌடியால் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் காற்று மாசுபாடு தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. டெல்லியில் பதிவு செய்யப்பட்ட ஒட்டுமொத்த காற்றின் தரம் 486 ஆக இருந்தது.