ETV Bharat / bharat

Jailer collection: 'விக்ரம்' பட மொத்த வசூலை 7 நாட்களில் முறியடித்ததா ஜெயிலர்? - உண்மை நிலவரம் என்ன? - ஜெயிலர் உலக வசூல்

Jailer Movie Collection : உலக அளவில் பாக்ஸ் ஆபிசில் ஜெயிலர் திரைப்படம் 400 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Aug 17, 2023, 1:18 PM IST

Updated : Aug 17, 2023, 4:18 PM IST

ஐதராபாத் : நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தின் மூலம் சினிமாவின் வசூல் மன்னன் என்பதை மீண்டும் நிருபித்து உள்ளார். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியான திரைப்படம் ஜெயிலர். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், விநாயகன், வசந்த் ரவி, மோகன்லால், சிவராஜ் குமார், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர். படம் வெளியாவதற்கு முன்பாகவே ‘காவாலா’, ஹுக்கும் ஆகிய பாடல்கள் வெளியாகி பட்டித் தொட்டி எங்கும் பரவி, வைரலாகி ரசிகர்களிடம் படத்தின் மீதா எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது.

இந்த படம் வெளியானது முதல் உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிசில் நல்ல வசூலை பெற்று வருகிறது. ஜெயிலர் படம் வெளியாகி ஒரு வார காலம் ஆன நிலையில் இன்னும் ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நேற்று (ஆகஸ்ட். 16) மட்டும் இந்திய அளவில் ஜெயிலர் திரைப்படம் 15 கோடி ரூபாய் வரை வசூல் செய்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. வார வேலை நாட்களில் சாதாரணமாக ஒரு திரைப்படத்திற்கு கிடைக்கும் வசூலை விட அதிகம் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: Jailer வெற்றிக்காக பரிசளிக்கும் ரஜினிகாந்த்.! இமயமலையிலிருந்து வந்த இன்ப அதிர்ச்சி..!

மேலும் விக்ரம் படத்தின் மொத்த வசூலையும் 7 நாட்களில் ஜெயிலர் திரைப்படம் முறியடித்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஜெயிலர் படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர்களின் அறிக்கையின் படி, உலக அளவில் ஜெயிலர் படம் 400 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்து உள்ளதாக கூறுகின்றனர். இந்திய அளவில் மட்டும் 225 கோடியே 65 லட்ச ரூபாய் வரை வசூல் செய்து உள்ளதாக கூறுகின்றனர்.

அது மட்டுமில்லாமல் ஜெயிலர் திரைப்படம் இந்தியா மட்டுமில்லாமல் அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் நல்ல வசூலை பெற்று வருவதாகவும், ஜெயிலர் படம் அமெரிக்காவில் கபாலி வசூலை முறியடித்து உள்ளதாகவும் பிரபல சினிமா விமர்சகர் ரமேஷ் பாலா தெரிவித்து உள்ளார்.

இதையும் படிங்க: Jailer Kavala Song: உள்ளூர் நடிகர்கள் தொடங்கி உலக அளவில் வைப் ஏற்றும் ’காவாலா’ பாடல்!!

Last Updated : Aug 17, 2023, 4:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.