சம்பா: ஜம்மு காஷ்மீரில் பா.ஜனதா தலைவர்களை குறிவைத்து கொலை செய்த பயங்கரவாதியிடம் காவலர்கள் விசாரணை நடத்திவருகின்றனர்.
ஜம்மு காஷ்மீரில் பாஜனதா தலைவர்கள் தொடர்ந்து கொல்லப்பட்டுவந்தனர். இதுவரை மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களுடன் காவலர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதில் தொடர்புடைய குற்றவாளியை காவலர்கள் தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில், அவர் சம்பா மாவட்டத்தில் பதுங்கியிருப்பதாக காவலர்களுக்கு தெரியவந்தது.
இதையடுத்து அங்கு சென்ற காவலர்கள் அவரை கைது செய்தனர். இது பற்றி காவலர்கள் தெரிவிக்கையில், “பா.ஜனதா தலைவர்கள் மற்றும் பாதுகாவலர் ஒருவர் என நான்கு கொலை வழக்குகளில் தொடர்புடையவரை கைது செய்துள்ளோம். அவர் ஸாகூர் அஹமது ராதர் மற்றும் காலித் என வெவ்வேறு பெயர்களில் அறியப்பட்ட சஹில் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது” என்றார். மேலும் இவர், சில பயங்கரவாத அமைப்புடன் இணைந்து செயல்பட்டவர் என்றும் கூறினார்கள். பா.ஜனதா தலைவர்கள் மூவர் மற்றும் காவலர் ஒருவர் குல்கம் பகுதியில் கடந்தாண்டு கொல்லப்பட்டனர்.
இதையும் படிங்க: ஜம்மு காஷ்மீரில் ஊடுருவ முயன்ற நபர் சுட்டு வீழ்த்தப்பட்டார்