ஸ்ரீநகர்: ஜம்முவின் ஆர்.எஸ்.புரா பகுதியிலுள்ள சர்வதேச எல்லைக்கு அருகே இந்திய எல்லை பாதுகாப்புப் படை (பி.எஸ்.எஃப்) ஒரு சுரங்கப்பாதை போன்ற அமைப்பைக் கண்டுபிடித்துள்ளது.
ஜம்முவின் ஆர்.எஸ்.புரா பகுதியில் சுரங்கப்பாதை போன்ற அமைப்பு கண்டறியப்பட்டுள்ளதாகவும், ஊடுருவலுக்காக சுரங்கப்பாதை தோண்டப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் எல்லைப் பாதுகாப்புப் படை உயர் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, ஜம்மு & காஷ்மீர் சம்பா மாவட்டத்தில் ஆயுதம் ஏந்திய ஐந்து பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் ஊடுருவல் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் உயர் அலுவலர்கள் கூறியுள்ளனர்.