ஸ்ரீநகர்: ஜம்மூ காஷ்மீரின் வாங்கம் பகுதியில் உள்ளூர் போலீசாருடன் பாதுகாப்பு படை வீரர்கள் இன்று (ஜூன் 19) சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, மூன்று பயங்கரவாதிகள் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டனர்.
முதற்கட்ட விசாரணையில், கைது செய்யப்பட்டிருப்பது அல்-பத்ர் பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த நாஜிம் ஆ பட், சிராஜ் தின் கான், அடில் குல் என்பதும், கிரால்குண்ட் பகுதியில் பதுங்கியிருந்து பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டுவந்ததும் தெரியவந்தது.
அவர்களிடமிருந்து ஒரு கைத்துப்பாக்கி, 8 தோட்டக்கள், 2 கையெறி குண்டுகள் கைப்பற்றப்பட்டன. முன்னதாக காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் பயங்கவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டு, ஒருவர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: குப்வாரா என்கவுண்டரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை