ETV Bharat / bharat

விண்ணில் சீறிப்பாய்ந்த பிஎஸ்எல்வி-சி51 - நீராதாரம்

காஞ்சிபுரத்தில் தனியார் கல்லூரி மாணவர்களால் தயாரிக்கப்பட்ட நானோ செயற்கைக்கோள் உள்ளிட்ட 19 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-51 ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்திலிருந்து விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது.

ISRO launches PSLV-C51 carrying Amazonia-1 and 18 other satellites

author img

By

Published : Feb 28, 2021, 12:32 PM IST

Updated : Feb 28, 2021, 2:22 PM IST

ஸ்ரீஹரிகோட்டா: ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து காலை 10.24 மணிக்கு காஞ்சிபுரத்தில் தனியார் கல்லூரி மாணவர்களால் தயாரிக்கப்பட்ட நானோ செயற்கைக்கோள், பிரேசிலின் அமசோனியா -1 உள்ளிட்ட 19 செயற்கைக்கோள்களை ஏந்திக் கொண்டு இஸ்ரோவால் தயாரிக்கப்பட்ட பிஎஸ்எல்வி- சி51 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.

அமசோனியா -1 என்பது விண்வெளி ஆராய்ச்சிக்கான தேசிய நிறுவனத்தின் (INPE) ஒளியியல் பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் ஆகும். பிரேசிலிய பிரதேசத்தில் பன்முகப்படுத்தப்பட்ட வேளாண்மையைப் பகுப்பாய்வு செய்வதற்கும், பயனர்களுக்கு ரிமோட் சென்சிங் தரவை வழங்குவதற்கும் இந்தச் செயற்கைக்கோள் உதவுகிறது.

அதேபோல, காஞ்சிபுரத்திலுள்ள ஜேப்பியார் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களை 460 கிராம் மட்டுமே எடையுள்ள யூனிட்டி சாட் ஜே.ஐ.டி. சாட் என்ற நானோ செயற்கைக்கோளை வடிவமைத்து அதனை விண்ணில் செலுத்தியுள்ளனர்.

இந்தச் செயற்கைக்கோள் கல்லூரியைச் சுற்றியுள்ள ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுச்சூழல் மாசு, நீராதாரம், சுகாதாரச் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது உள்ளிட்ட நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் இஸ்ரோ தலைவர் சிவன், பிரேசிலிய தூதுக்குழுவினர் உள்ளிட்டோர் பலர் கலந்துகொண்டனர்.

Last Updated : Feb 28, 2021, 2:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.