ETV Bharat / bharat

ஜிஎஸ்எல்வி-எஃப்10 ஏவுகணை பயணம் தோல்வி - இஓஎஸ்-03

அதி நவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் இஓஎஸ்-03 உடன், விண்ணில் ஏவப்பட்ட ஜிஎஸ்எல்வி - எஃப்10 ஏவுகணையின் பயணம் தொழில்நுட்பக்கோளாறு காரணமாக தோல்வியடைந்தது.

Satish Dhawan Space Centre
Satish Dhawan Space Centre
author img

By

Published : Aug 12, 2021, 6:37 AM IST

Updated : Aug 12, 2021, 9:15 AM IST

அமராவதி: புவியின் சுற்றுப்பாதை, விவசாயம், பேரிடர் மேலாண்மை கண்காணிப்பு பணிகளுக்காக இஓஎஸ்-03 என்னும் செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) உருவாக்கியிருந்தது.

இந்த செயற்கைகோள், ஜிஎஸ்எல்வி - எஃப் 10 ஏவுகணை மூலம் விண்ணில் செலுத்தப்பட திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி இன்று (ஆக.12) காலை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து 5.43 மணிக்கு செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது. இதற்கான கவுண்ட் டவுன் நேற்று (ஆகஸ்ட்.11) 03.43 மணிக்குத் தொடங்கியது.

ஜிஎஸ்எல்வி-எஃப்10 பயணம் தோல்வி

விண்ணில் செலுத்தப்பட்டபின், ஜிஎஸ்எல்வி-எஃப்10 ஏவுகணையின் கிரையோஜெனிக் என்ஜின் பகுதியில் சிறு தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால், திட்டமிட்டப்படி 18.39 நிமிடத்தில் செயற்கைகோள் அதன் சுற்றுவட்டப் பாதையையை அடையமுடியவில்லை. அதன்காரணமாக ஜிஎஸ்எல்வி-எஃப்10 பயணம் தோல்வியை சந்தித்துள்ளது. இதனை இஸ்ரோ தலைவர் சிவன் உறுதி செய்துள்ளார்.

பூமியின் மேற்பரப்பில் இருந்து 36,000 கி.மீ தூரத்தில் ஏவுகணை நிலைநிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இவ்வாறு நிகழ்ந்ததுள்ளது. ஜிஎஸ்எல்வி-எஃப்10, இந்தியாவிலிருந்து புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை சுமந்து செல்லும் 14ஆவது ஏவுகணை ஆகும்.

இதையும் படிங்க: நாளை விண்ணில் பாய்கிறது EOS-03 புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்!

Last Updated : Aug 12, 2021, 9:15 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.