பாட்னா(பிகார்): வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதல் மற்றும் 2ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தோல்வியை தழுவி தொடரை இழந்த இந்திய அணி 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
இந்திய வீரர் இஷான் கிஷன், இரட்டை சதம் அடித்து சாதனை படைத்தார். 131 பந்துகளில் 24 பவுண்டரி, 10 சிக்சர் என்று ரன் மழையை பொழிய செய்தார். மொத்தமாக 210 ரன்கள் குவித்து, ஆட்டமிழந்தார்.
இவரது இரட்டை சதத்தை நாடு முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக, அவரது சொந்த ஊரான பாட்னா விழாக் கோலம் பூண்டது. இஷானின் பெற்றோர், உறவினர்கள் உள்ளிடோர் மேள தாளம் முழுங்க இனிப்புகளை பரிமாறி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து இஷான் கிஷனின் தாயார் சுச்சீத்ரா சிங் ஈவிடி பாரத் செய்தியாளருக்கு அளித்த பேட்டியில், அடுத்த கிரிக்கெட் போட்டிகளிலும் இஷான் வெற்றியில் ஜொலிக்க வேண்டுமென வேண்டிக் கொள்கிறேன். வாய்ப்புகள் கிடைக்கிறதோ இல்லையோ. இப்போது இருக்கும் வாய்ப்புகளில் ஜொலிக்க வேண்டும் எனத் தெரிவித்தார். அதேபோல அவருடன் களமிறங்கி அடிக்கடி அறிவுரைகளை வழங்கிய விராட் கோலிக்கு நன்றி தெரிவிப்பதாக இஷானின் தந்தை பிரனாவ் பாண்டே தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மிரட்டல் யானை ...யாருக்கிட்ட வெட்டிங் ஷூட் எடுக்க வந்த பிச்சுப்புடுவேன்..