ETV Bharat / bharat

'சீனாவை ஒருபோதும் நம்பமுடியாது' – மூத்த பத்திரிகையாளர் பிரேம் பிரகாஷ்

author img

By

Published : Nov 23, 2020, 9:56 PM IST

சிம்லா ஒப்பந்தம் கையெழுத்திடப்படுவதற்குமுன், இந்திய காவலில் 95,000 க்கும் அதிகமான பாகிஸ்தான் சிறை கைதிகள் இருந்தபோது காஷ்மீர் பிரச்னையை ஒரு வழியாகத் தீர்க்க இந்தியாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதை நாம் இழந்து விட்டோம் என்று மூத்த பத்திரிக்கையாளர் பிரேம் பிரகாஷ் தனது "இந்திய அறிக்கை ஒரு பத்திரிகையாளராக எனது எழுபது ஆண்டு பயணம்" என்ற புத்தகத்தில் கூறியுள்ளார்.

Prem Prakash
Prem Prakash

தன்னுடைய 70 ஆண்டுகால சுறுசுறுப்பான பத்திரிகை வாழ்க்கையின் முக்கியமான நினைவுகளைத் தனது புத்தகத்தில் எழுதிய பிரகாஷ், ஈ.டிவி பாரத்தின் மூத்த நிருபரான கெளத்தம் பெப்ராயிடன் ஒரு சிறப்புப் பேட்டியில் சீனாவை ஒருபோதும் நம்ப முடியாது என்று கூறினார்.

1962 யுத்தத் தோல்விக்குப் பிறகு, மறைந்த பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேருவால் 20 மாதங்களில் இந்திய இராணுவத்தை மீண்டும் கட்டியெழுப்ப முடிந்தது என்று கூறினார்.

நேர்காணலின் சில குறிப்புகள்ꓽ

கேள்விꓽ உங்களுடைய புத்தகத்தில் சில முக்கியக் குறிப்புகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

பதில்ꓽ இதில் நான் எனது முழு வாழ்க்கையில் எதிர்கொண்ட பிரச்சினைகளைத் தொகுத்துள்ளேன். ஆங்கிலேயர்கள் இந்தியாவில் இருந்தபோது நான் ஒரு சிறுவனாக இருந்தேன். அது குறித்துச் சிலவற்றை நான் இந்தப் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளேன்.

அரசியலில், எனக்கு முதல் அங்கீகாரம் நான் 31 வயதாக இருந்தபோது கிடைத்தது. அப்போதைய பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேருவின் வாழ்க்கையின் ஒரு நாளைத் தொகுத்து உள்ளடக்க எனக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தது. அந்த நாள்களில் அது எளிதானது.

நான் கிட்டத்தட்ட பிரதமர் வீட்டாரின் நபர்களில் ஒருவன் போலவே இருந்தேன். இந்த நேர்காணல்கள், மற்றும் படப்பிடிப்பு போன்றவற்றை எப்படிச் செய்கிறோனோ அதுபோல எனது வாழ்க்கையினை கட்டியெழுப்ப நேரு எனக்கு உதவினார். அது ஒரு சிறந்த தருணமாக இருந்தது.

பிறகு நேருவின் பதவிக்காலம், கட்டுமானத் திட்டங்கள், சீனாவுடனான உறவு, 1962 போர், நேருவின் மரணம், சாஸ்திரி ஜி (லால் பகதூர் சாஸ்திரி) தாஷ்கண்ட் புறப்பாடு, 1965 போரின் வெற்றி போன்வற்றை களத்தில் இருந்து வழங்கினேன்.

ஒரு சமயம் ஒரு போரினைத் தொகுத்து வழங்க நான் ராணுவத்துடனேயே மலை உச்சிக்கு ஏறினேன். என் புத்தகத்தின் அட்டைப் படத்தில் இருப்பது அதுவே! நான் ஏறத்தாழ எல்லாவற்றையும் தொகுத்து உள்ளடக்கினேன்.

நரேந்திர மோடி, டாக்டர் மன்மோகன் சிங் காலத்தில், நான் களத்தில் இல்லாவிட்டாலும் அவர்களை குறித்து செய்திகளை வெளியிட்டுள்ளேன்.

கேள்விꓽ உங்கள் புத்தகத்தில் இந்தியா சீனாவிடம் 1962 போரில் தோற்றபோது முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு குற்ற மனசாட்சியுள்ளவராக இருந்தார் என்று குறிப்பிட்டுள்ளீர்களே?

பதில்ꓽ பண்டிட் நேரு குற்றவாளி அல்லது சீனாவிடம் நேருவால் இந்திய ராணுவம் சரணடைந்து ஆகியவை உண்மையில் இல்லை. ஆனால், அவர் ராணுவம் நவீனமயமப்படுத்தப்பட்டிருந்திருக்கலாம் என்று உணர்ந்தார். ஆனால், பிரச்சினை என்னவென்றால், கிருஷ்ண மேனனை அவர் பாதுகாப்பு அமைச்சாரக வைத்திருந்தார் என்பதுதான்.

இரண்டாம் உலகப் போரினால் ஏற்பட்ட மோசமான பாதிப்புகளை கண்டபின், சர்வதேச நாடுகள் தங்கள் பிரச்சினைகளை போர் மூலம் தீர்த்துக்கொள்ளாது என்பதை கிருஷ்ண மேனனும் அவரும் (நேருவும்) நம்பினர். இதன் காரணமாக, அவர்கள் இந்திய ராணுவத்தை நவீனமயமாக்காமல் இருந்தனர். இச்சூழலில் சீனாவை எதிர்த்துப் போரட வேண்டிய சூழல் ஏற்பட்டபோது ராணுவம் இரண்டாம் உலகப்போரின் ஆயுதங்களை மட்டுமே கொண்டிருந்தது.

நேரு அரசியல் ரீதியாக சீனாவை ஒதுக்கியே வைத்திருந்தார். சீனாவை ஒருபோதும் நம்ப முடியாது என்று நான் சொல்லுகிறேன். போரின் போது இன்று அருணாச்சல பிரதேசமாக உள்ள வடகிழக்கு எல்லை பகுதிகளை தாண்டி சீனா ராணுவம் வந்தது.

அந்தச் சமயத்தில் நம் துருப்புகள் பஞ்சாப் மற்றும் பிற சமவெளிகள் தாண்டி நெடுக செல்ல வேண்டியதாயிருந்தது. எப்படியோ அவர்கள் அங்கே சென்று சேலாவின் உச்சியை அடைந்துபோது, சீனர்கள் ஏற்கனவே நமது துருப்புகளுக்கு மேலே இருந்தனர். அதற்குள் சீனாவுக்கு ஆயுதங்களும் வந்துவிட்டது. இது இந்தியாவின் தோல்விக்கு வழிவகுத்து விட்டது.

அந்தச் சமயம் கிருஷ்ண மேனன் போரை அரசியல்மயமாக்கி, போரில் அனுமவம் இல்லாத ஒருவரை (பி. எம். கவுல்) ஜெனரலாக நியமித்தார். அவர் ராணுவத்தின் விநியோக குழுவிலுள்ள ஒரு ஜெனரல். அவர் துருப்புகளுக்கு ரேஷன் வழங்குவார். அவருக்கு எந்தவித போர் அனுபவமும் இல்லை. இப்படியொரு ஜெனரலை வைத்திருந்தால் கண்டிப்பாக போரை இழக்கத்தான் நேரிடும்!

கேள்விꓽ இந்தியாவில் வெளியுறவு கொள்கையை பொறுத்தவரை கடந்த காலத்தை நீங்கள் ஏற்பீர்களா அல்லது இக்கால கொல்கையை ஏற்பீர்களா?

பதில்ꓽ சுதந்திரத்திற்கு பின் நம் நாடு ஒரு சுயாதீன வெளியுறவுக் கொள்கையை அமைக்க விரும்பியதுய. துரதிர்ஷ்டவசமாக, அது அணிசேராத கொள்கையான இருந்துவிட்டது.

சோவியத் யூனியனுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பனிப்போருக்கு நாம் பலியாகிவிட்டோம். ஏனெனில், ஒன்று யாராவது ஒருவருடன் இணைந்திருக்க வேண்டும் அல்லது மற்றொருவருடன் பிரிந்திருக்கவேண்டும் என்று இரு தரப்பினரும் விரும்பினர்.

ஆனால், இன்று உலகம் மாறிவிட்டது. ஆகையால், இந்தியா தனது சொந்த நலனைக் கவனிக்கும் கொள்கையினைக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் நாம் நினைவிற் கொண்டிருக்க வேண்டியது என்னவென்றால், 1962 போர் தோல்விக்குப் பின்னர் நேருவால் வெறும் 20 மாதங்களில் இந்திய ராணவத்தை மீண்டும் கட்டியெழுப்ப முடிந்தது. அவர் இரவு நேரங்களில் மிக தாமதமாக வேலை செய்வதை நான் பார்த்திருக்கிறேன்.

இதன் காரணமாகவே 1967ஆம் ஆண்டில் சீனர்கள் மீண்டும் நாதுலாவில் நம்முடன் சண்டையிட முயன்றபோது, அதை முறியடித்ததோடு மட்டுமன்றி 400க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மேலும், அவர்கள் திபெத்துக்குள் 30 மைல் தூரம் பின்வாங்கிச் சென்றனர்.

இந்தியாவின் ஜெனரல் சாகத் சிங் போர் நிறுத்தத்தினை அறிவித்ததால் சீனர்கள் உயிரிழந்த ராணுவ வீரர்களின் உடலை எடுத்துச் செல்ல முடிந்தது.

கேள்விꓽ வங்கதேச விடுதலைப் போரில் இந்தியாவின் பங்கு குறித்து நீங்கள் விரிவாக பதிவு செய்துள்ளீர்கள். அது குறித்து?

பதில்ꓽ பாகிஸ்தானே தங்கள் சொந்தத் தேர்தலை அங்கீகரிக்க மறுத்தபோது வங்கதேச பிரச்னை ஆரம்பமானது. பெரும்பான்மையினரின் தலைவராக ஷேக் முஜிபுர் ரஹ்மான் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், அவர் பிரதமரானதை பூட்டோ (சுல்பிகர் அலி பூட்டோ) மற்றும் பாகிஸ்தான் ராணுவமும் ஏற்றுக்கொள்ளவில்லை.

ஆகையால், அதுவே போராட்டத்திற்கு வழி வகுத்தது. மற்றும் ஷேக் முஜிபுர் ரஹ்மான் இந்தப் போராட்டமானது (எபார் சங்ராம் முக்தி சங்கிராம்) ஒரு விடுதலைப் போர் என்று உரத்த சத்தமாகவும், தெளிவாகவும் அறிவித்தார்.

பின்னர் பாகிஸ்தான் ராணுவம், அவர்கள் மீது தாக்குதல் நடத்தியது. அப்போது 10 லட்சத்திற்கும் அதிகமான அகதிகள் இந்தியாவிற்கு வந்தனர். இந்துக்கள் மட்டுமல்லாது, முஸ்லீம்களும் குறிப்பாக அவாமி லீக்கின் ஆதரவாளர்களும் அதில் இருந்தனர்.

அப்போது, இந்தியா ஒரு நிலைப்பாட்டினை எடுக்க வேண்டியிருந்தது. அதன்படி அந்த மக்கள் திரும்பிச் செல்ல வேண்டும் என்றும் இந்தியா அவர்களுக்கு உதவ வேண்டும் என்றும் முடிவு எடுக்கப்பட்டது. ஆனால், அப்போது அங்கு ஒரு சுதந்திர வங்கதேசம் இருக்க வேண்டும் என்பதிலும் அரசு தெளிவாக இருந்தது. இந்திய ராணுவம் அதை வெறும் 15 நாள்களில் முடித்தது.

மூத்த பத்திரிக்கையாளர் பிரேம் பிரகாஷ் நேர்காணல்

கேள்விꓽ மறைந்த பிரதமர் இந்திரா காந்தி காஷ்மீர் பிர்ச்சினை தீர்ப்பதற்கு முன்பே சிம்லா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதற்காக விமர்சனங்களை எதிர் கொண்டதாக நீங்கள் கூறியுள்ளீர்களா?

பதில்ꓽ பாகிஸ்தானின் 93,000 போர் கைதிகள் (பி.ஓ.டபிள்யு) நம்மிடம் இருந்ததை நினைவிற்கொள்ள வேண்டும். உண்மையில் இவர்கள் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் இருந்த மிகப்பெரிய எண்ணிக்கையிலான (பி.ஓ.டபிள்யு) போர் கைதிகள் ஆகும்.

அவர்களைத் திரும்பப் பெறவேண்டிய அழுத்தம் பாகிஸ்தானுக்கு இருந்தது. சிம்லாவில் பேச்சுவார்த்தைக்கு பூட்டோ தனது மகளுடன் வந்தார். உண்மையில், காஷ்மீர் எல்லையில் கட்டுப்பாட்டினைக் கடைபிடிப்பதாக பூட்டோ உறுதியளித்துக் கொண்டேயிருந்ததால் நாம் நூலிழையில் அதை இழந்துவிட்டோம். காஷ்மீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இந்திய வற்புறுத்தியதால், பேச்சுவார்த்தை இறுதியாக முறிந்துவிட்டதை நான் கடைசி நாளில் உணர்ந்தேன்.

இருப்பினும், திடீரென்று இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்படுவதாக சொல்லப்பட்டது. மற்றும் அது காஷ்மீர் பிரச்சினை தீர்க்கப்படாமல் கையெழுத்திடப்பட்டது. உண்மையில் அந்தத் தருணமானது எல்லோருக்கும் ஒரே முறையில் பிரச்சினையை தீர்த்து வைத்திருந்திருக்கக் கூடியதொரு தருணமாகும். நாம் அதை இழந்துவிட்டோம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.