ETV Bharat / bharat

சர்வதேச தேநீர் தினம் 2022: நீங்கள் டீ பிரியரா.? அப்போ கொண்டாடுங்கள்.. - டீ தினம்

தேநீர் பிரியர்கள் குஷிபடுத்தும் விதமாக ஆண்டுதோறும் டிசம்பர் 15ஆம் தேதி அன்று சர்வதேச டீ தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

சர்வதேச டீ தினம்
சர்வதேச டீ தினம்
author img

By

Published : Dec 15, 2022, 6:18 PM IST

இந்தியா, இலங்கை, நேபாளம், வியட்நாம், இந்தோனேசியா, பங்களாதேஷ், கென்யா, மலாவி, மலேசியா, உகாண்டா மற்றும் தான்சானியா போன்ற முக்கிய தேயிலை உற்பத்தி நாடுகளில் டிசம்பர் 15 சர்வதேச தேயிலை தினமாக கொண்டாடப்படுகிறது. 2005 ஆம் ஆண்டு முதல் இந்த சிறப்பு தினத்தை நினைவு கூர்ந்து வருகின்ற்ன.

இருப்பினும் பெரும்பாலான தேயிலை உற்பத்தி செய்யும் நாடுகளில் தேயிலை அறுவடை காலம் மே மாதம் தொடங்கும் என்பதால், மே 21 ஐ சர்வதேச தேயிலை தினமாகவும் அறிவித்தது. இதனால் தேநீருக்கு இரண்டு சர்வதேச தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

டீ உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என பலர் கூறி வந்தாலும், அதையும் தாண்டி டீ இல்லாமல் வாழ்வே இல்லை என பெரும்பாலானோர் வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக பேச்சுலர்ஸ்க்கு டீ தான உணவாக இருக்கிறது. டீ உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்றாலும், அதில் இருக்கும் நன்மைகளும் நாம் அறிந்துகொள்ள வேண்டிய ஒன்ரே.

பொதுவாகவே மக்களிடையே வேலைப்பளு, மன அழுத்தம், ஒருவித பதற்றம், நடத்தை சார்ந்த பிரச்னைகள் ஆகியவைத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை தடுப்பதற்கு மூலிகைகளை உள்ளடக்கிய ஆயுர்வேத டீ குடித்தால் இவ்வித பிரச்னைகளிலிருந்து விடுபடலாம் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

உச்சம் தலை முதல் உள்ளங்கால் வரையில் நன்மைகள் தரக்கூடிய மூலிகை தேநீர்கள் உண்டு. அதாவது, ரோஸ் டீ, துளசி டீ, ஏலக்கா டீ, கொத்தமல்லி டீ, புதினா டீ, முருங்கைக்கீரை டீ, இஞ்சி டீ, வல்லாரைக்கீரை டீ, அஸ்வகந்தா டீ, கெமோமில் டீ, லெமன் டீ, அதிமதுர டீ, லவங்க டீ என பல்வேறு மூலிகை தேநீர்கள் உள்ளன. அதன் நன்மைகள் குறித்து விரிவாக காணலாம்.

ரோஸ் டீ
ரோஸ் டீ

ரோஸ் டீ: காய்ந்த ரோஜா இதழ்கள் நான்கு முதல் ஐந்து எடுத்துக்கொள்ளவும். இரண்டு கிராம் கொத்தமல்லி விதை மற்றும் சிறிதளவு குங்கும பூ, அரை கிராம் வெந்தயம் சேர்த்து கொதிக்க வைத்து பின்னர் வடிகட்டி குடிக்கவும். இது நிற மேன்மைக்கும் செரிமானத்திற்கும் பயன்படுகிறது.

துளசி டீ: துளசி இலைகளை நீரில் கொதிக்க வைத்து வெல்லம், ஏலக்காய் சேர்க்கவும். இது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும்.

ஏலக்கா டீ: தண்ணீரில் ஏலக்காயை போட்டு கொதிக்க வைத்து, பின்னர் வடிகட்டி எலுமிச்சை பழச்சாறு வெல்லம் கலந்து தினமும் சாப்பிடலாம். இது உடலின் வெப்பத்தை தணிக்கும்.

கொத்தமல்லி டீ: கொத்தமல்லித் தழையைச் சிறிதளவு நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி சுக்குத்தூள் வெல்லம் கலந்து பருகவேண்டும்.

புதினா டீ: புதினா இலைகளை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி எலுமிச்சைப் பழச்சாறு, வெல்லம் சேர்த்து குடிக்கலாம்.

முருங்கைக்கீரை டீ: கொதிக்கவைத்த தண்ணீரில் முருங்கைக்கீரையை போட்டு சிறிது நேரம் ஆறவிட்டு தேன் கலந்து அருந்தினால் விரைவில் எடைகுறையும்.

வல்லாரைக் கீரை டீ: இது அனைவருக்கும் தெரிந்த நோயெதிர்ப்பு சக்தி மற்றும் ஊட்டச்சத்துகள் நிறைந்த ஒரு மூலிகை. இதில் ஆன்டி ஆக்ஸிடண்டுகள் அதிகம் இருப்பதால் நோய்த்தொற்று மற்றும் கிருமிகளிடமிருந்து பாதுகாப்பு அளிக்கும். எனவே இந்த மூலிகை டீயை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

அதிமதுர டீ: சுவாசப்பாதையை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் முக்கிய மூலிகைகளில் ஒன்று அதிமதுரம். மேலும் இது செரிமானத்தைத் தூண்டி, கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். சளி, இருமல் மற்றும் மார்பு அடைப்பு போன்ற பிரச்னைகளுக்கு சிறந்த தீர்வாக அமைகிறது இந்த அதிமதுரம். உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து நுண்ணிய கிருமிகள் மற்றும் அலர்ஜியிலிருந்து நம்மை பாதுகாக்கிறது. எனவே அதிமதுர டீயை தினசரி சேர்த்துக்கொள்ளலாம்.

அதிமதுர டீ
அதிமதுர டீ

அஸ்வகந்தா டீ: கடந்த 2019ஆம் ஆண்டில் அஸ்வகந்தா அடங்கிய டீயை குடித்தால் மன அழுத்தத்திலிருந்து விடுபடலாம் என்ற அனுமானத்துடன் மூன்று குழுக்களுக்கு சோதனை நடத்தப்பட்டது. இதில் முதல் குழுவிற்கு 250 மி.கி. அளவிலான அஸ்வகந்தா டீ, இரண்டாம் குழுவிற்கு 600 மி.கி. அளவிலான அஸ்வகந்தா டீ மற்றும் மூன்றாம் குழுவிற்கு வேறு டீ கொடுக்கப்பட்டது. 8 வாரங்கள் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவில், 600 மி.கி. அஸ்வகந்தா டீயை உட்கொண்ட மாதிரி சோதனையாளர்களுக்கு ‘கார்டிசோல்’ என்னும் அழுத்தத்திற்கு காரணமான ஹார்மோன் அதிகளவில் குறைந்தது கண்டறியப்பட்டது.

கெமோமில் டீ: 2013 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் முடிவில், கெமோமில் எனப்படும் பூவில் இருந்து தயாரிக்கப்படும் டீ மூலம் மன அழுத்தம் பரவலாக குறைவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் இந்த கெமோமில் டீ சிலருக்கு உணவு ஒவ்வாமையை ஏற்படுத்தும்.

லெமன் டீ: 2004ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வின்படி, லெமன் டீயை பருகுவது பலருக்கும் ஒரு ஸ்ட்ரெஸ் பஸ்டராக இருப்பதாக தெரிய வந்தது. தற்போது லெமன் டீ சர்வதேச அளவில் பலராலும் பருகப்பட்டு வருகிறது.

லெமன் டீ
லெமன் டீ

இஞ்சி டீ: தினசரி நாம் குடிக்கும் டீயில் சிறிது இஞ்சி சேர்த்தாலே அதன் சுவை அபாரம்தான். மேலும் சிறந்த மூலிகையான இஞ்சியில் எண்ணற்ற மருத்துவ குணங்களும், ஊட்டச்சத்துகளும் அடங்கியுள்ளன. எனவே உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தினசரி இஞ்சி டீ சேர்த்துக்கொள்வது அவசியம்.

லவங்க டீ: நீங்கள் அதிக உடல் எடையுடன் கஷ்டப்பட்டுக் கொண்டு இருந்தால், இலவங்கப்பட்டை டீயை மிதமான அளவில் எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில், இலவங்கப்பட்டை தேநீர் குடிப்பது உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்க உதவும். மிதமான அளவில் எடுத்துக் கொள்வதே நல்லது. ஏனெனில், இந்த பானத்தில் கூமரின் உள்ளது. எனவே அதிகப்படியாக இதனை எடுத்துக் கொள்வது தீங்கு விளைவிக்கும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

கிரீன் டீ: கிரீன் டீ என்றாலே உடல் எடையைக் குறைப்பதற்காக மற்றும் மன நிம்மதியைப் பெறுவதற்காக குடிக்கும் சூடான பானம் என்று அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் இதில் உள்ள எண்ணற்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் சருமத்தில் பழுதடைந்துள்ள செல்களை புதுப்பித்து, முதுமைத் தோற்றம் ஏற்படுவதைத் தடுக்கும்.

கிரீன் டீ
கிரீன் டீ

இதையும் படிங்க: ஆயுர்வேத டீ குடித்தால் இவ்வளவு நன்மையா?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.