ETV Bharat / bharat

sudoku day: மூளைக்கு வேலைதரும் புதிர் விளையாட்டான சுடோகு தினம் இன்று...

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 9, 2023, 2:21 PM IST

international sudoku day: மூளைக்கு வேலைதரும் புதிர் விளையாட்டான சுடோகு பற்றி சில சுவாரஸ்யமான தகவல்களை உலக சுடோகு தினமான இன்று காணலாம்.

international sudoku day
international sudoku day

ஹைதராபாத்: உலகம் முழுவதும் சிறியவர் முதல் பெரியவர் வரை விருப்பத்துடன் ஆடும் விளையாட்டுகளில் ஒன்று சுடோகு என்ற புதிர் விளையாட்டு. சுடோகு என்றால் ஜப்பானிய மொழியில் எண்-இடம் என்று பொருளாகும்.ஒவ்வொரு எண்ணும் ஒற்றையாக இருக்கவேண்டும் என்று பொருள்படும் ஜப்பானிய சொற்றொடர் தான் சுடோகு என்பதாகும். இது 9x9 என்று அமைந்த 81 சிறு கட்டங்களில் அடங்கிய ஒரு விளையாட்டு ஆகும்.

ஒவ்வொரு நெடுக்கு அல்லது குறுக்கு வரிசையில் உள்ள ஒன்பது கட்டங்களில் 1 முதல் 9 வரையிலான எண்களை நிரப்ப வேண்டும். இந்த எண்களை ஒரு வரிசையில் ஒரே ஒரு முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது விதிமுறையாகும். ஒவ்வொரு கட்டத்திலும் என்ன எண் வரக்கூடும் என்பதை மிகத் துல்லியமாக முடிவு செய்து நிரப்ப வேண்டும். இதில் உள்ள 81 கட்டங்களில் ஏதாவது ஒரு கட்டத்தில் ஒரு எண்ணை தவறாக நிரப்பினாலும், சுடோகு புதிரை வெற்றிகரமாக முடிக்க முடியாமல் போய்விடும்.

ஒரு குறிப்பிட்ட கூட்டுத்தொகை வருமாறு எண்களைக் கொண்டு விளையாடும் இந்த புதிர் விளையாட்டை 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கணிதவியலாளர் லியோன்ஹார்ட் யூலர் என்பவர் கண்டுபிடித்தார்.இந்த விளையாட்டின் நவீன வடிவம் அமெரிக்காவின் முறைப்படுத்தப்பட்டதாக கூறப்பட்டாலும் 1980ஆம் ஆண்டு இந்த விளையாட்டை பிரபலப்படுத்தியவர் மகி காஜி என்று கூறப்படுகிறது.

சுடோகு ஒரு எண்ணை அடிப்படையாக கொண்ட ஒரு புதிர். எனவே இதற்கு தீர்வுகாண மொழி அறிவு அவசியமில்லை. சுடோகு உலக அளவில் பிரபலமாக விளங்குவதற்கு இதுவும் ஒரு மிக முக்கிய காரணம்.முதன்முதலாக 2006-ல், இத்தாலி நாட்டில் உலக சுடோகு சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, உலகின் பல்வேறு நாடுகளிலும் சுடோகு உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

சுடோகு விளையாட்டானது அதன் புதிரின் கடினத்தன்மையை பொறுத்து வகையிடபடுகிறது. சில பத்திரிகைகளில் சுடோகு புதிர்களை எளிமையானவை, நடுத்தரமானவை, கடினமானவை என்று மூன்று வகைகளாக தரம் பிரித்து வெளியிடுவார்கள். சுடோகு விளையாடுவதற்கு வயது ஒரு தடை இல்லை. குழந்தைகளுக்கென்று மிக, மிக எளிமையான சுடோகு புதிர்களும் உண்டு. இவை, வழக்கமான 9-ஐ 9 கட்டங்களாக இல்லாமல் 4-ஐ 4 என்று பதினாறு கட்டங்கள் மட்டுமே கொண்டவை.

இவற்றில் 1 முதல் 4 வரையிலான எண்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். எனவே, வயது வித்தியாசமின்றி, எல்லா வயதினரும், சுடோகு புதிர்களுக்கு விடை காண முயற்சிக்கலாம். ஆரம்பத்தில் கடினமாக இருந்தாலும், நாளடைவில், சுடோகு விளையாட்டின் நுட்பங்கள் தெரிந்து , விடை கண்டுபிடிப்பது சுலபமாகி விடும்.

சுடோகு விளையாடுவதன் மூலமாக நமது மூளையை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள முடியும். தினமும் ஒரு சில சுடோகு புதிர்களுக்கு விடை கண்டுபிடிப்பதன் மூலமாக மூளையை புத்துணர்ச்சியோடு வைத்துக்கொள்ள முடியும். அதிக அளவில் புதிர்களுக்கு விடை கண்டுபிடிக்கும்போது, தன்னம்பிக்கை அதிகரிக்கும். சுடோகு விளையாடுவதை பழக்கமாக்கிக்கொண்டால், அல்சைமர் என்ற மறதி நோயின் தாக்குதல் வாய்ப்புகள் குறையும் என ஆராய்ச்சி பூர்வமாக கண்டுபிடித்துள்ளனர். உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்க பல விளையாட்டுக்கள் இருந்தாலும், மூளையை பட்டை தீட்டும் சுடோகு போன்ற விளையாட்டுக்கள் எப்போதுமே வரவேற்பைப் பெறத் தவறுவதில்லை.

இதையும் படிங்க : "விபத்தில் வலது கையை இழந்தும், தன்னம்பிக்கையால் ஆட்சியரானேன்" - ஆட்சியர் மகாபாரதி ஊக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.