இந்தியாவில் நிலவும் கோவிட்-19 நிலவரம் குறித்து ஒன்றிய சுகாதாரத் துறைச் செயலர் ராஜேஷ் பூஷண், நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே. பால் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
இந்தியாவில் கோவிட்-19 நிலவரம்
அப்போது பேசிய ராஜேஷ் பூஷண், நாட்டில் இதுவரை 22 பேருக்கு டெல்டா பிளஸ் கரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது எனவும், இது கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் காணப்படுவதாகவும் கூறினார்.
அதேவேளை, இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள் இரண்டும் டெல்டா ரக வைரசுக்கு எதிராகத் திறனுடன் செயல்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
டாக்டர் வி.கே. பால் பேசுகையில், இந்தியாவில் போலியோ மருந்துகள் ஒரே நாளில் ஆறு முதல் எட்டு கோடி பேருக்கு செலுத்தப்படுகின்றன. எனவே, அதிகளவில் கோவிட்-19 தடுப்பூசி செலுத்தும் திறன் இந்தியாவிடம் உள்ளது.
இருப்பினும் தடுப்பூசி செலுத்துவதில் பெண்களிடம் தயக்கம் அதிகமுள்ளதால், பாலின வேறுபாடு இன்றி பெண்களும் அதிகளவில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: கோவாக்சினில் 77.8 விழுக்காடு செயல்திறன்!