ETV Bharat / bharat

’உயர்நீதிமன்ற நீதிபதிகளின் உள்ளாடைகள் காவி நிறம்’ - கேரள பாப்புலர் ஃப்ரண்ட் - உயர்நீதிமன்ற நீதிபதிகளின் உள்ளாடைகள் காவிநிறம்

கேரள பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பினர் நடத்திய பேரணியில் நீதிபதிகளின் உள்ளாடைகள் காவி நிறம் என அவ்வமைப்பின் தலைவர் யாகியா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

’உயர்நீதிமன்ற நீதிபதிகளின் உள்ளாடைகள் காவிநிறம்’- கேரள பாப்புலர் ஃப்ரண்ட்

author img

By

Published : May 30, 2022, 6:45 AM IST

ஆலப்புழா: கேரள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தலைவர் யஹியா தங்கல் உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக சர்ச்சையான கருத்தை தெரிவித்துள்ளார். குறிப்பாக, நீதிபதிகளின் 'உள்ளாடைகள் காவி நிறம் என்று தெரிவித்தார்.

கேரளாவின் ஆலப்புழாவில் கடந்த 21ஆம் தேதி நடந்த பேரணியில் தங்கல் பேசுகையில், "நீதிமன்றங்கள் அச்சத்தில் உள்ளது. எங்கள் ஆலப்புழா பேரணியின் கோஷங்களைக் கேட்டு உயர் நீதிமன்ற நீதிபதிகள் அதிர்ந்து போகின்றனர். காரணம் என்ன தெரியுமா? காரணம் அவர்களின் உள்ளாடைகளின் நிறம் காவி. அவை காவி நிறத்தில் இருப்பதால் அவை மிக வேகமாக வெப்பமடையும். அந்த வெப்பத்தின் விளைவால் தீக்காயம் ஏற்படும். அது அவர்களை தொந்தரவு செய்யும்" என கூறினார்.

இதுதொடர்பான வீடியோ வைரலானதை தொடர்ந்து, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆலப்புழாவில் பிஎஃப்ஐ (கேரள பாப்புலர் ஃப்ரண்ட் ) பேரணியில் இளைஞர் ஒருவர், "இந்துக்கள் அரிசையையும், கிறிஸ்துவர்கள் ஊதுப்பத்தியையும் தங்களின் இறுதிச் சடங்கிற்காக சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்.

நீங்கள் கண்ணியமாக வாழ்ந்தால், எங்கள் மண்ணில் வாழலாம். அப்படி வாழவில்லை என்றால் உங்களுக்கு சுதந்திரம் அளிக்கும் வழி எங்களுக்கு தெரியும்" என கொலை மிரட்டல் விடுத்து பேசியுள்ளார்.

இது கேரளாவில், இந்து, கிறிஸ்தவ மக்களுக்கான நேரடி அச்சுறுத்தலாக கருதப்பட்டது. இந்த அமைப்பினர் எழுப்பிய கோஷம் தொடர்பான வழக்கில், மேலும் 18 பேரை கேரள போலீசார் நேற்று முன்தினம் (மே 27) கைது செய்தனர். ஆலப்புழாவில் நடைபெற்ற பேரணி குறித்தும், ஆத்திரமூட்டும் வகையில் கோஷமிட்டது குறித்தும் பிஎஃப்ஐ அமைப்பு மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறைக்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, பிஎஃப்ஐ மாநிலத் தலைவர் சிபி முஹம்மது பஷீர், இந்த முழக்கம் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு எதிரானது என்றும் ஆர்எஸ்எஸ் பயங்கரவாதத்திற்கு எதிராக தனது கட்சி தொடர்ந்து போராடும் என்றும் கூறினார்.

இதையும் படிங்க: 4 ம் வகுப்பு மாணவன் பலாத்காரம் செய்ததாக சக மாணவி புகார்..!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.