ETV Bharat / bharat

இந்தியாவில் தொற்றுநோயின் 2ஆவது அலை : நாம் எங்கே தவறு செய்தோம்?

தலைமையில் இருப்பவர்கள் உண்மையான ஆபத்தை அறியாமல் மனநிறைவோடு இருந்தபோது மருத்துவர்கள், குறிப்பாக துறை சார்ந்த வல்லுநர்கள், அபாயங்கள் குறித்து எச்சரிப்பதை ஒருபோதும் நிறுத்தவில்லை. முதல் கோவிட்-19 அலையை வெற்றி கொண்டுவிட்டோம் என்று கொண்டாடியவர்கள் யாரும் மருத்துவத் தொழிலைச் சேர்ந்தவர்கள் அல்ல என்பதில் ஆச்சரியமில்லை.இதுகுறித்து விளக்கியுள்ளார் ஈடிவி பாரத்தின் செய்தி ஆசிரியர் பிலால் பட்.

pandemic
இரண்டாவது அலை
author img

By

Published : Apr 27, 2021, 4:39 PM IST

சுகாதார உள்கட்டமைப்பு கிட்டத்தட்ட நிலைகுலைந்து போயிருக்கும் இந்த நேரத்தில், கோவிட் -19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் ஒரு நாடு, சமூகம் மற்றும் தனிநபர் என நாம் அனைவரும் எங்கே தவறு செய்தோம் என்ற கேள்விக்குப் பதில் இல்லை அல்லது மறைக்கப்பட்டிருந்தாலும் கூட, அதற்கான தேவையே எழவில்லை.

தலைமையில் இருப்பவர்கள் உண்மையான ஆபத்தை அறியாமல் மனநிறைவோடு இருந்தபோது மருத்துவர்கள், குறிப்பாக துறை சார்ந்த வல்லுநர்கள், அபாயங்கள் குறித்து எச்சரிப்பதை ஒருபோதும் நிறுத்தவில்லை. முதல் கோவிட்-19 அலையை வெற்றி கொண்டுவிட்டோம் என்று கொண்டாடியவர்கள் யாரும் மருத்துவத் தொழிலைச் சேர்ந்தவர்கள் அல்ல என்பதில் ஆச்சரியமில்லை.

21 மில்லியன் மக்கள்தொகை கொண்ட இலங்கை, ஒரு தொற்றுநோய்க்கு மத்தியில் தேர்தல்களை நடத்திய உலகின் முதல் நாடு. ஆனால் 1.3 பில்லியன் தேசத்திற்கு அது ஒரு உத்வேகமாக இருக்கக்கூடாது.

இந்தியாவில், முதல் கோவிட்-19 அலைகளின் போது பிகார் தேர்தல் நடந்தது. இன்றைய அளவிற்கு நிலைமை மிகவும் மோசமானதாக அப்போது இல்லை என்றாலும், தேர்தல் பரப்புரையின் பெரும்பகுதி மெய்நிகர் / ஆன்லைன் முறையில் நடைபெற்றது.

அடுத்து வந்த அனைத்து தேர்தல்களிலும், பொதுமக்களுக்கு இலவச தடுப்பூசி என்பது பெரும்பாலும் அளிக்கப்பட்ட வாக்குறுதியாகும். நாட்டின் மக்கள் தொகையில் ஒரு பகுதியினர் கூட தடுப்பூசி போடப்படாத நிலையில் கூட தடுப்பூசிகள் பிற நாடுகளுக்கு வழங்கப்பட்டன. மனிதாபிமான அடிப்படையில் செய்யப்பட்ட இந்த உதவி தற்போது நமக்கே ஆபத்தாக அமைந்து விட்டது.

தினமும் 300,000க்கும் அதிகமான மக்கள் தொற்றுக்கு ஆளாகிறார்கள். கல்லறைகள் மற்றும் மயானங்கள் உடல்களால் நிரம்பியுள்ளன.

இதிலிருந்து நம்மைக் காப்பாற்றும் மூன்று விஷயங்கள் உள்ளன -

முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளி, மற்றும் தடுப்பூசி. மக்கள், இப்போது அதிக அளவில் முகக்கவசம் அணிந்து வருகிறார்கள், ஆனால் தடுப்பூசியைப் பொருத்தவரை, சம்பந்தப்பட்ட பல்வேறு பகுதிகள் போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும். பெரும்பான்மையான மக்கள் தடுப்பூசி போடப்படும் வரை, அவர்கள் விரும்பியபடி இருப்பதாகத் தெரிகிறது.

பரவலின் உச்சம் இன்னும் வரவில்லை என்று நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். தற்போது நாட்டில் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை பயமுறுத்துகிறது. நோய்த்தொற்றுகள் அதிகரிக்கும் நேரத்தில், சுகாதார உள்கட்டமைப்பு, குறிப்பாக ஆக்ஸிஜன் சப்ளை, போதுமான அளவு அதிகரிக்கும் என்று நாம் எதிர்பார்க்கலாம்.

இந்தியா முழுவதிலும் உள்ள மயானங்களில் உள்ள நீண்ட வரிசைகள், குறிப்பாக தலைநகரான புது தில்லி மட்டுமல்ல, உத்தரப்பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா போன்ற நெருக்கமான மக்கள்தொகை கொண்ட மாநிலங்களில், மக்கள் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதை நிறுத்தியதால் கோவிட்-19 எந்தளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை நிரூபிக்கிறது.

இந்த கடினமாக கட்டத்தில், மக்கள் பிரச்சினைகளை சரிசெய்ய நீதித்துறையை எதிர்நோக்குகிறார்கள். இது சம்பந்தமாக, கோவிட்-19 இன் மோசமான இரண்டாவது அலைக்கு இந்திய தேர்தல் ஆணையமே முக்கிய காரணம் என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியிருப்பது ஆறுதலாக உள்ளது.

இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது. தேர்தலுக்குட்பட்ட மாநிலங்களில் நடத்தப்படும் தேர்தல் பேரணிகளைக் குறிப்பிடுகையில், அரசியல் பேரணிகள் நடைபெறும் போது இந்திய தேர்தல் ஆணையம் வேறு கிரகத்தில் இருந்ததா என்று நீதிமன்றம் ஆணையத்திடம் கேள்வி எழுப்பியது.

உண்மையில், கல்லறைகள் மற்றும் மயானங்களில் தினமும் இறந்த உடல்களால் நிரம்பியிருந்தபோதும், தொலைக்காட்சிகளில் தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் வைரஸின் தாக்கம் குறித்த அறிக்கைகளை விட,​ தேர்தல் பேரணி குறித்த படங்கள் மற்றும் காணொளிகள் அதிகம் காட்டப்பட்டன.

தற்போது ஒரு முக்கியமான மாநிலத் தேர்தலுக்கான பேரணிகளில், மேற்கு வங்காளத்தை விட பெரிய தேர்தல் பேரணி எங்கும் காணப்படவில்லை. அரசியல்வாதிகளின் பேச்சுகளில் கூட்டத்திற்கு வந்த மக்களுக்கு எந்த எச்சரிக்கையும் இல்லை.

மேற்கு வங்கத்தின் தலைநகரான கொல்கத்தாவில் வசிக்கும் மக்களில் ஒருவீடு விட்டு ஒருவருக்கு கடந்த சில நாட்களில் கோவிட்-19 பாதிப்பை கண்டறிந்ததில் ஆச்சரியமில்லை. உத்தரப் பிரதேசத்தில் கும்பமேளா, ஒரு திறந்தவெளியில் நடைபெறும் நிகழ்வு என்பதால் அங்கு ஆபத்து இருக்காது என்று நியாயப்படுத்தப்பட்டது, அங்கு பல வாரங்களாக ஒரே இடத்தில் லட்சக்கணக்கான மக்கள் கூடினர்.

ஆனால், மக்களை அங்கே கூடச்செய்த அதே தலைவர்கள், இப்போது கோவிட் வழிகாட்டு நெறிமுறைகளை பற்றி பேசுகின்றனர்.

இதையும் படிங்க: நிரம்பி வழியும் தகன மேடைகள்... பார்கிங்கில் 100-க்கும் மேற்பட்டோர் தகனம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.