டெல்லி: ஒலிம்பிக்ஸ் 2020 போட்டி கடந்தாண்டு ஜூலை 24ஆம் தேதி டோக்கியோவில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், உலகம் முழுவதும் பரவிய கரோனா தொற்று பாதிப்பால், போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன.
இந்நிலையில், ஒலிம்பிக் போட்டிகள் வருகிற ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. இதில் பங்கேற்க 190 பேர் கொண்ட வலுவான இந்தியா அணி தயார்ப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்காக இந்திய அணிக்கான 'தீம்' பாடல் நேற்று (ஜூன்.23) அறிமுகம் செய்யப்பட்டது. 'லக்ஷிய தேரா சாம்னே ஹே' (Lakshya Tera Samne Hai) என்ற அந்தப் பாடலை மோஹித் சௌஹான் இசையமைத்துப் பாடியுள்ளார்.
-
Tune in to the melody of the Olympic Theme Song crafted for the Indian Olympic Contingent #TuThaanLey sung by @_MohitChauhan at the launch event, marking 30 days to #TokyoOlympics. #Cheer4India @PMOIndia @KirenRijiju @WeAreTeamIndia @mygovindia @SonySportsIndia @IndianOlympians pic.twitter.com/FVuaT9YZRO
— SAIMedia (@Media_SAI) June 23, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Tune in to the melody of the Olympic Theme Song crafted for the Indian Olympic Contingent #TuThaanLey sung by @_MohitChauhan at the launch event, marking 30 days to #TokyoOlympics. #Cheer4India @PMOIndia @KirenRijiju @WeAreTeamIndia @mygovindia @SonySportsIndia @IndianOlympians pic.twitter.com/FVuaT9YZRO
— SAIMedia (@Media_SAI) June 23, 2021Tune in to the melody of the Olympic Theme Song crafted for the Indian Olympic Contingent #TuThaanLey sung by @_MohitChauhan at the launch event, marking 30 days to #TokyoOlympics. #Cheer4India @PMOIndia @KirenRijiju @WeAreTeamIndia @mygovindia @SonySportsIndia @IndianOlympians pic.twitter.com/FVuaT9YZRO
— SAIMedia (@Media_SAI) June 23, 2021
இந்த தீம் பாடல் அறிமுக நிகழ்ச்சியில், விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். இந்த நிகழ்வை இந்திய ஒலிம்பிக் சங்கம் (ஐஓஏ) ஏற்பாடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது, சமூக வலைதளங்களில் இந்தியாவின் ஒலிம்பிக் பாடல் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!