ETV Bharat / bharat

பசு கோமியத்தால் மனிதர்களுக்கு ஆபத்தா? அதிர்ச்சி தரும் தகவல்கள்!

author img

By

Published : Apr 11, 2023, 6:04 PM IST

பசுவின் கோமியத்தில் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய கிருமிகள் இருக்கலாம் என்றும் அதை நேரடியாக பயன்படுத்துவது நல்லது அல்ல என ஆய்வில் தெரிய வந்து உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.

Urine
Urine

பரேலி : பசுவின் கோமியத்தில் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய நுண்ணியிரிகள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. உத்தர பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் உள்ள இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம், பசுவின் கோமியம் குறித்த ஆய்வில் ஈடுபட்டது. அய்வின் முடிவில் பசுவின் கோமியம் மனிதர்கள் நேரடியாக பயன்படுத்தத் தகுந்தது இல்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பசுவின் கோமியத்தில் மனிதர்களுக்கு நேரடி தீங்கு விளைவிக்கக் கூடிய பாக்டீரியா நுண்ணுயிரிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேநேரம் எருமை மாட்டின் கோமியத்தில் அதிகளவிலான நுண்ணுயிரிகள் புலப்பட்டதாக ஆய்வில் முடிவில் தெரியவந்ததாக கூறப்பட்டு உள்ளது.

இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தை சேர்ந்த மூன்று முனைவர் பட்ட மாணவர்கள் நடத்திய ஆய்வில் இந்த தகவல் தெரியவந்ததாக கூறப்பட்டு உள்ளது. நல்ல ஆரோக்கியமான பசு மற்றும் காளை மாடுகளிடம் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளை ஆய்வுக்கு உட்படுத்தியதில் 14 வகையிலான தீங்கு விளைவிக்கக் கூடிய நுண்ணியிரிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பசு மற்றும் காளைகளிடம் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில் எஸ்செக்ரிசியா கோலி (Escherichia coli) எனப்படும் நுண்ணியிரிகள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நுண்ணியிரிகள் மனிதர்களின் உடல்களில் வயிற்று வலி உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்து தொடர்பாக ஆராய்ச்சி மாணவர்கள் கூறுகையில், ஆய்வுக்காக 73 பசு மற்றும் எருமை மாடுகளின் கோமியம் சேகரிக்கப்பட்டு உள்ளது. பசுக்களை விட எருமை மாடுகளின் கோமியத்தில் அதிக எதிர்ப்பு சக்தி இருப்பதாக கூறப்படும் நிலையில், சம விகிதாச்சாரத்தில் ஆய்வுக்கு உட்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதில் எருமையின் கோமியத்தில் அதிக தீங்கு விளைவிக்கக் கூடிய S Epidermidis மற்றும் E Rhapontici வகையிலான நுண்ணுயிரிகள் இருந்ததாக தெரிவித்து உள்ளனர். ஷகிவால், தர்பாகர், விந்தவானி கலப்பின மாடுகளின் கோமியத்தின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தியதாகவும், கடந்த ஆண்டு ஜூன் முதல் நவம்பர் மாதம் ஆய்வு நடத்தியதாக கூறப்பட்டு உள்ளது.

சில தனிப்பட்ட பசுக்களின் சிறுநீர், பாலினம் மற்றும் இனப்பெருக்க இனங்கள் அப்பாற்றப்பட்ட பசுக்களின் கோமியம் இந்த வகை நுண்ணியிரிகளுக்கு தடையாக இருக்கலாம் என்றும் அதனால் பசுவின் கோமியம் நுண்ணியிரிகளுக்கு எதிரானது என்ற கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஒரு சிலர் சுத்திகரிக்கப்பட்ட கோமியத்தில் நுண்ணியிரிகள் பாதிப்பு இல்லை என கூறி வரும் நிலையில், அது குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு உள்ளதாக முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க : 15 வயது மாணவி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி - பிரதமர் மோடி கொடுத்த அட்வைஸ் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.