வாஷிங்டன்: அமெரிக்காவில் இண்டியானா மாகாணத்தில் வசித்து வருபவர் இந்தியாவைச் சேர்ந்த மாணவர் வருண் (வயது 24). இவர் கடந்த 29ஆம் தேதி ஆயுதங்களால் தாக்கப்பட்டதாக அமெரிக்கா செய்தி நிறுவனங்கள் தகவல் வெளியிட்டு உள்ளன.
அமெரிக்க செய்தி நிறுவனம் தெரிவித்ததின் படி, வருண் என்கின்ற இந்திய மாணவன் இண்டியானா மாகாணம் வால்பரைசோ நகரத்தில் அமைந்துள்ள உடற்பயிற்சிக் கூடத்தின் அருகில் இருக்கும் கோயிலுக்குள் ஆயுதங்களால் தாக்கப்பட்டு கீழே விழுந்து கிடந்தார். உடனடியாக இந்த தகவல் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கீழே விழுந்து கிடந்த வருணை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அருகில் இருந்த ஃபோர்ட் வெயின் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
வருணின் உடல்நிலையை பரிசோதித்து மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மருத்துவர்களின் வெளியிட்டு உள்ள அறிக்கையில், வருணின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், உயிர் பிழைப்பதற்கு 5 சதவீதம் மட்டுமே வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டு உள்ளது.
இதுகுறித்து போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்குச் சென்று சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தும், அக்கம் பக்கத்தினரிடமும் விசாரணை நடத்தியும் வருவதாக கூறப்படுகிறது. பின் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்கள் மூலம் வருணை தாக்கியது ஜோர்டன் (வயது 24) என்ற இளைஞர் என்பது தெரிய வந்தது.
ஜோர்டன் மீது பயங்கர ஆயுதம் பயன்படுத்துதல் மற்றும் கொலை முயற்சி போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, ஜோர்டனிடம் அடுத்த கட்ட விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டு உள்ளது. அந்த விசாரணையில் ஜோர்டன் கூறியதாவது, "உடற்பயிற்சிக் கூடத்தில் தனக்கு மஜாஜ் செய்யுமாறு வருணை கேட்டேன். வருண் தனக்கு தெரியாது என்று கூறியதால், ஆத்திரமடைந்து ஆயுதங்களால் தாக்கினேன்" எனத் தெரிவித்ததாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது என செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது.
இதையும் படிங்க:எதிர்க்கட்சி தலைவர்கள் ஆப்பிள் ஐ-போன் எச்சரிக்கை பதிவு - மத்திய அமைச்சர் விளக்கம்!