ETV Bharat / bharat

ரயில்வேயை தனியார்மயமாக்க திட்டமில்லை - பியூஷ் கோயல் உறுதி - ரயில்வே தனியார்மயம் பியூஷ் கோயல்

இந்திய ரயில்வேயை தனியார்மயமாக்க அரசுக்கு எந்தத் திட்டமும் இல்லை என ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

பியூஷ் கோயல்
பியூஷ் கோயல்
author img

By

Published : Mar 16, 2021, 2:45 PM IST

மக்களவைக் கூட்டத்தொடரில் துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதம் நடைபெற்றது. அதில் பேசிய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், "கடந்த இரண்டு ஆண்டுகளில் ரயில்வே விபத்து காரணமாக ஒரு நபர்கூட உயிரிழக்கவில்லை. பயணிகள் பாதுகாப்புக்கு அரசு மிகுந்த முக்கியத்துவம் அளித்துள்ளது.

துறை சிறப்பாக இயங்கவே தனியார் பங்களிப்பு, முதலீட்டிற்கு ஊக்கமளிக்கப்படுகிறது. அதேவேளை ரயில்வே ஒருபோதும் தனியார்மயமாகாது. அது என்றும் இந்திய மக்களின் சொத்தாகவே இருக்கும்" என்றார்.

கடந்தாண்டு ரயில்வே முதலீடு 1.5 லட்சம் கோடி ரூபாயாக இருந்த நிலையில், தற்போது 2.15 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது என்பதையும் அவர் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: மாநிலங்களவை பதவியை ராஜினாமா செய்தார் ஸ்வபன் தாஸ்குப்தா

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.