டெல்லி: சத்ரபதி சிவாஜியின் ராஜமுத்திரையை பிரதிபலிக்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்ட, கடற்படையில் அட்மிரல் பொறுப்பு வகிப்பவர்களுக்கான புதிய தோள்பட்டை இலச்சினையை (Epaulettes) இன்று கடற்படை அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் 4ஆம் தேதி கடற்படை தினத்தன்று மகாரஷ்டிரா மாநிலம், சிந்துர்க் மாவட்டத்தில் நிறுவப்பட்ட சத்ரபதி சிவாஜியின் சிலையைத் திறந்து வைத்த பின், பிரதமர் நரேந்திர மோடி இதற்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
அதன்படி, கடற்படையில் அட்மிரல் பொறுப்பு வகிப்பவர்களின் தோள்பட்டை இலச்சினை வடிவமைப்பு மாற்றப்பட்டுள்ளது. தங்க நிறத்திலான கடற்படை சின்னம், எட்டு திசைகளைக் குறிக்கும் வகையிலான எண்கோணம், வாள், தொலைநோக்கி ஆகியவற்றுடன் சத்திரபதி சிவாஜியின் ராஜமுத்திரையும் இந்த புதிய தோள்பட்டை இலச்சினையில் இடம் பெற்றுள்ளது.
இந்திய கடற்படையின் அட்மிரல் (Admiral), வைஸ் அட்மிரல் (vice Admiral) , சர்ஜ் வைஸ் அட்மிரல் (surg vice Admiral), சர்ஜ் ரியர் அட்மிரல் (surge rear Admiral), ரியர் அட்மிரல் (rear Admiral) ஆகிய பொறுப்பு வகிப்பவர்களுக்கான தோள்பட்டை இலச்சினையில் இந்த புதிய மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
-
As we usher in the new year #2024, #IndianNavy proudly unveils the new Design of Admirals' Epaulettes. Announced by @PMOIndia during #NavyDay2023 at Sindhudurg - the 🛑 in the new Design, drawn from the Naval Ensign & inspired from Rajmudra of #ChhatrapatiShivajiMaharaj, is a… pic.twitter.com/Ssxq8ZLOZd
— SpokespersonNavy (@indiannavy) December 29, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">As we usher in the new year #2024, #IndianNavy proudly unveils the new Design of Admirals' Epaulettes. Announced by @PMOIndia during #NavyDay2023 at Sindhudurg - the 🛑 in the new Design, drawn from the Naval Ensign & inspired from Rajmudra of #ChhatrapatiShivajiMaharaj, is a… pic.twitter.com/Ssxq8ZLOZd
— SpokespersonNavy (@indiannavy) December 29, 2023As we usher in the new year #2024, #IndianNavy proudly unveils the new Design of Admirals' Epaulettes. Announced by @PMOIndia during #NavyDay2023 at Sindhudurg - the 🛑 in the new Design, drawn from the Naval Ensign & inspired from Rajmudra of #ChhatrapatiShivajiMaharaj, is a… pic.twitter.com/Ssxq8ZLOZd
— SpokespersonNavy (@indiannavy) December 29, 2023
முன்னதாக கடற்படையில் காலனி ஆதிக்கத்தை அகற்றும் வகையில் கடற்படை சின்னம், கொடி மாற்றப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்திய கடற்படையில் அட்மிரல்களுக்கான புதிய தோள்பட்டை இலச்சினையில் மாற்றம் செய்யப்பட்டு இருப்பது குறித்து இந்திய கடற்படையில் செய்தித் தொடர்பாளர், அவரது X சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அவரது பதிவில், “கடற்படை தினத்தில் சிந்துர்க்-இல் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தது போல இந்திய கடற்படைக்கான அட்மிரல் தோள்பட்டை இலச்சினையை அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்கிறோம். சத்ரபதி சிவாஜியின் ராஜ முத்திரையை பிரதிபலிக்கும் இந்த புதிய இலச்சினை, இந்திய கடற்படையின் பாரம்பரியத்தை எடுத்துரைக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பெயர் மாற்றப்பட்ட அயோத்தி ரயில் நிலையம்.. நாளை மறுநாள் பிரதமர் திறந்து வைக்கிறார்!