டெல்லி: இந்தியாவிற்கும், கனடாவிற்கும் இடையே அதிகரித்து வரும் பதற்றத்தை எதிர்கொள்ளும் வகையில், கனடாவில் உள்ள அனைத்து இந்தியர்களும், பயணம் மேற்கொள்பவர்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் (MEA), “அதிகரித்து வரும் பாதுகாப்பு குறைபாடுகளுக்கு மத்தியில் இந்திய தூதர்கள் மற்றும் இந்திய மக்களை குறிவைத்து அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருகின்றன.
-
Advisory for Indian Nationals and Indian Students in Canada:https://t.co/zboZDH83iw pic.twitter.com/7YjzKbZBIK
— Arindam Bagchi (@MEAIndia) September 20, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Advisory for Indian Nationals and Indian Students in Canada:https://t.co/zboZDH83iw pic.twitter.com/7YjzKbZBIK
— Arindam Bagchi (@MEAIndia) September 20, 2023Advisory for Indian Nationals and Indian Students in Canada:https://t.co/zboZDH83iw pic.twitter.com/7YjzKbZBIK
— Arindam Bagchi (@MEAIndia) September 20, 2023
கனடாவில் வளர்ந்து வரும் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் அரசியல் ரீதியான வெறுப்பு குற்றங்கள் மற்றும் குற்றவியல் வன்முறைகளைக் கருத்தில் கொண்டு, அங்குள்ள அனைத்து இந்தியர்களும், பயணம் மேற்கொள்பவர்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த ஆலோசனையானது அதிகரித்து வரும் பதட்டங்களை எதிர்கொண்டு கனடாவில் வசிக்கும் அல்லது பயணம் செய்யும் இந்திய குடிமக்களின் நல்வாழ்வைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
கனடாவில் இது போன்ற சம்பவங்கள் நடந்த பகுதிகள் மற்றும் இடங்களைத் தவிர்ப்பதன் முக்கியத்துவத்தையும் இந்த ஆலோசனை வலியுறுத்துகிறது. இது இந்திய குடிமக்களை பாதுகாப்பற்ற சூழ்நிலைகளில் இருந்து விலக்கி, அந்நாட்டில் இருக்கும்போது அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்திய அரசு, கனடாவில் உள்ள தனது குடிமக்களைப் பாதுகாக்க, இந்திய எதிர்ப்பு கருத்துக்கு ஆதரவானவர்களால் அதிகரித்து வரும் அச்சுறுத்தல்கள் மீது தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
குறிப்பாக இந்திய மாணவர்கள், கனடாவில் நிகழும் பாதுகாப்பற்ற சூழல் காரணமாக மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவும், விழிப்புடன் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கனடாவில் கல்வி கற்கும் இந்திய மாணவர்களின் பாதுகாப்பு குறித்து வெளிவிவகார அமைச்சகம் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது. மேலும், இந்த கவலைகளை நிவர்த்தி செய்ய கனடா அதிகாரிகளுடன் நெருக்கமாக செயல்பட்டு வருகிறது.
கனடாவில் உள்ள இந்திய மக்கள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை மேலும் மேம்படுத்த, இந்தியர்கள் ஒட்டாவாவில் உள்ள இந்திய தலைமை தூதரகம் அல்லது டொராண்டோ மற்றும் வான்கூவரில் உள்ள இந்திய துணைத் தூதரகங்களின் இணையதளங்கள் அல்லது madad.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்துகொள்ள பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. கனடாவில் உள்ள இந்திய குடிமக்களுக்கு ஏதேனும் அவசர அல்லது விபரீத சம்பவங்கள் ஏற்பட்டால், தலைமைத் தூதரகம் அல்லது துணைத் தூதரகங்களை தொடர்பு கொள்ளுவதற்கு இந்த இணையதளங்கள் மூலம் பதிவு செய்யலாம்.
இதையும் படிங்க: மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா வாக்கெடுப்பு; பெரும்பாலான உறுப்பினர்கள் ஆதரவு!