ஹைதராபாத்: தெற்காசிய கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி நேற்று இரவு நடந்தது. குவைத்-இந்தியா மோதிய இந்த போட்டியில் பெனால்டி ஷீட் அவுட்டில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்தப் போட்டிக்கு பின்னர் மணிப்பூரைச் சேர்ந்த இந்திய கால்பந்து வீரர் ஜீக்சன் சிங் தேசிய கொடிக்கு பதிலாக ஏழு வண்ணங்களைக் கொண்ட ஒரு கொடியினை போர்த்தி இருந்தார். மணிப்பூரின் மெய்டீஸ் இனத்தைச் சேர்ந்த பாரம்பரிய ஏழு குலங்களை பிரதிபலிக்கும் வகையிலான, ஏழு நிறங்களைக் கொண்ட அந்த கொடியை அவர் போர்த்தி இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
மணிப்பூரைச் சேர்ந்தவரும், இந்திய கால்பந்து அணியின் டிபென்ட் மிட்ஃபீல்டருமான ஜீக்சன் சிங் செயலுக்கு கண்டனங்கள் எழுந்த நிலையில் அவர் அதுகுறித்து, அவரது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்தார். அவரது ட்விட்டர் பதிவில், “யாருடைய மனதையும் புண்படுத்துவதற்காக நான் கொடியுடன் வரவில்லை. எனது மாநிலமான மணிப்பூரில் நடக்கும் பிரச்னைகளை அனைவரின் கவனத்திற்கும் கொண்டுவரவே நான் முயன்றேன். இந்த வெற்றி அனைத்து இந்தியர்களுக்கும் சமர்ப்பணம்” எனப் பதிவிட்டுள்ளார்.
-
Dear Fans,
— Jeakson Singh Thounaojam (@JeaksonT) July 4, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
By celebrating in the flag, I did not want to hurt the sentiments of anyone. I intended to bring notice to the issues that my home state, Manipur, is facing currently.
This win tonight is dedicated to all the Indians. pic.twitter.com/fuL8TE8dU4
">Dear Fans,
— Jeakson Singh Thounaojam (@JeaksonT) July 4, 2023
By celebrating in the flag, I did not want to hurt the sentiments of anyone. I intended to bring notice to the issues that my home state, Manipur, is facing currently.
This win tonight is dedicated to all the Indians. pic.twitter.com/fuL8TE8dU4Dear Fans,
— Jeakson Singh Thounaojam (@JeaksonT) July 4, 2023
By celebrating in the flag, I did not want to hurt the sentiments of anyone. I intended to bring notice to the issues that my home state, Manipur, is facing currently.
This win tonight is dedicated to all the Indians. pic.twitter.com/fuL8TE8dU4
மேலும் மற்றொரு பதிவில், “எனது சொந்த மாநிலமான மணிப்பூரில் அமைதி திரும்பும் என்று நம்புகிறேன். அணிக்கு ஆதரவு தந்த ரசிகர்களுக்கு நன்றி” எனப் பதிவிட்டு உள்ளார். ஜீக்சன் சிங் செய்த இந்தச் செயலுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலர் சமூக வலைதளத்தில் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
-
I hope that peace returns to my home state of Manipur.
— Jeakson Singh Thounaojam (@JeaksonT) July 4, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Thank you to the fans for coming out and supporting the team tonight! #SaveManipur #PeaceAndLove #india #saffchampion2023
">I hope that peace returns to my home state of Manipur.
— Jeakson Singh Thounaojam (@JeaksonT) July 4, 2023
Thank you to the fans for coming out and supporting the team tonight! #SaveManipur #PeaceAndLove #india #saffchampion2023I hope that peace returns to my home state of Manipur.
— Jeakson Singh Thounaojam (@JeaksonT) July 4, 2023
Thank you to the fans for coming out and supporting the team tonight! #SaveManipur #PeaceAndLove #india #saffchampion2023
மணிப்பூரில் கடந்த மே மாதம் முதல் கலவரம் நடந்து வருகிறது. அம்மாநிலத்தில் பெரும்பான்மை சமூகமாக மெய்டீஸ் இன மக்கள் தங்களை பழங்குடியினர் பிரிவில் சேர்க்க வேண்டும் என நீண்ட நாட்களாக அரசிடம் கோரிக்கை வைத்து வந்தனர். மெய்டீஸ் இன மக்களை பழங்குடியினர் பிரிவில் சேர்க்கக் கூடாது என குக்கி இனத்தைச் சேர்ந்த மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் மெய்டீஸ் இன மக்களை பழங்குடியின பிரிவில் சேர்க்கும் அரசின் முடிவிற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அனைத்து பழங்குடியின சங்கத்தினர் கடந்த மே மாதம் பேரணி ஒன்றினை நடத்தினர். அந்தப் பேரணியின் போது ஏற்பட்ட கலவரம் தற்போது வரை ஓயாமல் நடந்து வருகிறது.
மாதக்கணக்கில் நடந்து வரும் இந்த கலவரத்தால் பல்லாயிரக்கணக்கான வீடுகளும், நூற்றுக்கணக்கான தேவாலயங்களும் தீக்கிரையாக்கப்பட்டன. மேலும் ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்களின் வீடுகளும் தீ வைத்து எரிக்கப்பட்டன. மாநிலத்திலும், மத்தியிலும் ஆளும் கட்சியான பாஜகவால் வன்முறையைக் கட்டுப்படுத்த முடியவில்லை எனவும், அரசியல் நோக்கத்திற்காக திட்டமிட்டு வன்முறை ஏற்படுத்தப்பட்டு உள்ளது எனவும் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வந்தன.
இந்நிலையில், மணிப்பூரில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என கடந்த திங்கள் கிழமை அன்று அம்மாநில முதலமைச்சர் பைரன் சிங் அறிவித்து இருந்தார். அவர் அறிவிப்பைத் தொடர்ந்து இன்று (ஜூலை 5) மணிப்பூரில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது. முதல் நாளான இன்று மாணவர்களின் வருகை குறைந்த அளவிலேயே இருந்தாலும் பள்ளிகள் திறக்கப்பட்டதால் மணிப்பூர் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.