தவாங்: அருணாச்சல பிரதேச மாநில எல்லையில் உள்ள தவாங்கில் இந்திய-சீன ராணுவத்தினருக்கு இடையே டிசம்பர் 9ஆம் தேதி மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலை சீன மக்கள் விடுதலை ராணுவம் நடத்தியுள்ளது. இந்த மோதலில் இந்திய வீரர்கள் சிலர் காயமடைந்துள்ளனர். அதேபோல சீன ராணுவ வீரர்களும் காயமடைந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. இந்த மோதல் போக்கு நீடிக்கவில்லை. டிசம்பர் 9ஆம் தேதியே முடிவுக்கு வந்துவிட்டது. இந்த மோதலில் காயமடைந்த இந்திய வீரர்கள் கவுகாத்தியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
-
On 9th Dec 2022, PLA troops contacted the LAC in Tawang Sector of Arunachal Pradesh which was contested by Indian troops in a firm and resolute manner. This face-off led to minor injuries to a few personnel from both sides. Both sides immediately disengaged from the area: Sources pic.twitter.com/vQLXcM3xLS
— ANI (@ANI) December 12, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">On 9th Dec 2022, PLA troops contacted the LAC in Tawang Sector of Arunachal Pradesh which was contested by Indian troops in a firm and resolute manner. This face-off led to minor injuries to a few personnel from both sides. Both sides immediately disengaged from the area: Sources pic.twitter.com/vQLXcM3xLS
— ANI (@ANI) December 12, 2022On 9th Dec 2022, PLA troops contacted the LAC in Tawang Sector of Arunachal Pradesh which was contested by Indian troops in a firm and resolute manner. This face-off led to minor injuries to a few personnel from both sides. Both sides immediately disengaged from the area: Sources pic.twitter.com/vQLXcM3xLS
— ANI (@ANI) December 12, 2022
அருணாச்சலில் இந்திய-சீன ராணுவத்தினருக்கு இடையே மோதல் ஏற்படுவது இது முதல்முறையல்ல. கடந்த 2006ஆம் ஆண்டிலிருந்து அடிக்கடி மோதல் நடந்துவருகிறது. இறுதியாக சீன எல்லையில் உள்ள யாங்சேவில் 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ரோந்து பணியின்போது இந்திய-சீன ராணுவத்தினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. சீனா ராணுவம் 2020ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் தேதி லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவத்தினருடன் மோதியது. அதில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்குப் பிறகு அருணாச்சலில் மோதலில் ஈடுபட்டுள்ளது.
இதையும் படிங்க: சீன தொழிலதிபர்கள் தங்கும் விடுதியில் தாக்குதல்... காபூலில் பரபரப்பு