ETV Bharat / bharat

துபாய் விமானக் கண்காட்சியில் பங்கேற்க சென்ற இந்திய விமானப்படை

துபாயில் இரண்டாண்டுக்கு ஒரு முறை நடைபெறும் விமானக் கண்காட்சியில், இந்திய விமானப்படையினர் பங்கேற்க இருக்கின்றனர்.

Indian Air Force participation in Dubai Air Show  Indian Air Force  Dubai Air Show  துபாய் விமான கண்காட்சி  இந்திய விமானப்படை  துபாய் விமான கண்காட்சியில் இந்திய விமானப்படை பங்கேற்பு
விமான கண்காட்சி
author img

By

Published : Nov 11, 2021, 4:22 PM IST

அபு துபாய்(ஐக்கிய அரபு எமிரேட்ஸ்): துபாய், அல் மக்தோம் சர்வதேச விமான நிலையத்தில் நவம்பர் 14ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை‌ விமானக் கண்காட்சி நடைபெற உள்ளது.

இக்கண்காட்சியில் பங்கேற்பதற்காக, இந்திய விமானப் படைக்கு, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு அழைப்பு விடுத்துள்ளது.

இந்த அழைப்பினை ஏற்று, இக்கண்காட்சியில் இந்திய விமானப்படையின் சூர்யகிரண் மற்றும் சாரங் சாகசக் குழுவினர் பங்கேற்க உள்ளனர். மேலும் இந்திய விமானப்படையின் உள்நாட்டு தயாரிப்பான தேஜஸ் விமானம் இக்குழுவில் இணைந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து சவுதி, ரஷ்யா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சாகசக் குழுவினருடன், இந்திய விமானப்படையும் சாகச நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளது.

இந்நிலையில் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக துபாய் சென்ற இந்திய விமானப்படைக் குழுவினரை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விமானப்படை உயர் அலுவலர்கள் வரவேற்றனர்.

இதையும் படிங்க: EXCLUSIVE: கைவினைக் கலைஞர்களை கவுரவ ஆசிரியர்களாக்க வேண்டும் - பத்மஸ்ரீ முனுசாமி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.