ETV Bharat / bharat

விமானப் போர் ஒத்திகையிலிருந்து விலகிய இந்தியா - கோப்ரா வாரியர் போர் ஒத்திகை

உக்ரைன் போரை கருத்தில் கொண்டு பிரிட்டனுடனான விமானப் போர் ஒத்திகையிலிருந்து இந்தியா விலகியுள்ளது.

Indian Air Force
Indian Air Force
author img

By

Published : Feb 26, 2022, 5:23 PM IST

இந்தியா மற்றும் பிரிட்டன் நாடுகள் இணைந்து கோப்ரா வாரியர் போர் ஒத்திகையை வரும் மார்ச் 6ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது. இந்திய விமானப்படை பங்கேற்கவிருந்த இந்த போர் ஒத்திகையில் தேஜாஸ் ரக விமானங்கள் பங்கேற்கவிருந்தன. வெளிநாட்டில் தேஜஸ் ரக விமானங்கள் பறக்கவிருந்தது இதுவே முதல்முறை.

இந்நிலையில், உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், இந்தியா-பிரிட்டன் கூட்டு போர் பயிற்சியிலிருந்து இந்தியா விலகுவதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய விமானப்படை வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போதைய சர்வதேச சூழலை கருத்தில் கொண்டு, பிரிட்டனில் நடைபெறவிருந்த போர் ஒத்திகையிலிருந்து இந்தியா விலகுகிறது எனக் கூறியுள்ளது.

முன்னதாக இம்மாதம் 15ஆம் தேதி முதல் 18ஆம் தேதிவரை சிங்கப்பூரில் நடைபெற்ற ஏர் ஷோவில்-2022 இந்திய விமானப்படைகளைச் சேர்ந்த 44 பேர் கொண்ட குழு பங்கேற்று சாகச பணிகளில் ஈடுபட்டது.

இதையும் படிங்க: நான் இங்கேதான் இருகேன் - வைரலாகும் உக்ரைன் அதிபர் வீடியோ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.