ETV Bharat / bharat

இந்தியாவில் 87 லட்சத்தை நெருங்கும் கரோனா பாதிப்பு! - கரோனா வைரஸ் இந்தியா

நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 86 லட்சத்து 83 ஆயிரத்து 916 ஆக உயர்ந்துள்ளது.

கரோனா
கரோனா
author img

By

Published : Nov 12, 2020, 4:57 PM IST

இந்தியாவில் கரோனா வைரஸ் (தீநுண்மி) தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தினந்தோறும் 40 ஆயிரத்தை தாண்டுகிறது. இத்தீநுண்மியை கட்டுப்படுத்தும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் தீவிராக களமிறங்கியுள்ளனர்.

இந்நிலையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"கடந்த 24 மணி நேரத்தில் 47 ஆயிரத்து 905 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல், கரோனா பாதிப்பால் சிகிச்சை பலனின்றி 550 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 86 லட்சத்து 83 ஆயிரத்து 916 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 28 ஆயிரத்து 121 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோரின் எண்ணிக்கை 80 லட்சத்து 66 ஆயிரத்து 916 ஆக உள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளனர்.

அதிகப்பட்சமாக, மகாராஷ்டிரா மாநிலத்தில் கரோனா தீநுண்மியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17 லட்சத்து 31 ஆயிரத்தை கடந்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக கர்நாடகா மாநிலத்தில் கரோனா பாதிப்பு 8 லட்சத்து 53 ஆயிரமாக உள்ளது. இதுவரை மொத்தமாக 12 கோடியே 19 லட்சம் நபர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. நேற்று மட்டும் சுமார் 11 லட்சத்து 93 ஆயிரம் பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.